விண்வெளியில் ஓர் அதிசயம் - தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

Space
Space

- மதுவந்தி

வான்வெளியில் நடக்கும் அந்த அதிசயம் என்னவென்று தெரிந்தவர்களுக்கும், தெரிந்து தவறவிட்டவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் மீண்டும் காண வாய்ப்பிருக்கிறது என நாசா அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

என்ன அதிசயம் என்று கேட்பவர்களுக்காக:

ஆறு கிரகங்கள் ஒரே வரிசையில் வானில் ஜூன் மூன்றாம் தேதி தெரியும் என விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் ஜூன் மூன்றாம் தேதி ஆறில் இரண்டு கிரகங்கள் மட்டுமே தெரியும் எனவும் ஜூன் இருபத்தி ஏழாம் தேதி முதல் இருபத்தொன்பதாம் தேதி வரை ஆறும் தெரியும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

செவ்வாய் (மார்ஸ்), சனி (சாட்டர்ன்), வியாழன் (ஜூபிட்டர்), புதன் (மெர்க்குரி), யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இந்த ஆறு கிரகங்களும் பூமியின் அருகாமையில் ஒரே வரிசையில் தெரியும் என அறிவித்துள்ளனர். இந்த அபூர்வக் காட்சியை ‘பிளானட் பரேட்’ எனக் கூறுகின்றனர்.

விடியற்காலை, சூரியின் உதிப்பதற்கு இருபது முதல் முப்பது நிமிடற்த்திக்கு முன் கிரகங்களைத் தெளிவாகப் பார்க்கலாம் எனவும் இந்த நிகழ்வு ஜூலை வரை இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், சூரியன் விடிந்தால் வெளிச்சம் அதிகம் இருக்கும், அதனால் கிரகங்களைப் பார்ப்பது கடினம் என நாசா அறிவித்துள்ளது.

செக்க சிவந்த செவ்வாயும், மஞ்சள் வண்ண சனியும் நிலவின் மிக அருகில் தெரியும். அதனால் அதனை தெற்கு வானில் பார்ப்பது மிக எளிது. சூரியனைச் சுற்றிவரும் வியாழன் பூமிக்கு அருகில் மீண்டும் வரும் இருபத்தி நான்காம் தேதி வருகிறது. அதனை அடிவானத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் அவற்றை நாம் வெறும் கண்களால் பார்ப்பது கடினம். தொலைநோக்கியை வைத்து மட்டுமே பார்க்க முடியும். இருபத்தேழாம் தேதி இவை அனைத்தும் பூமியின் அருகில் வரும்போது ஒரே கோட்டில் வானில் தெரியும்.

இதையும் படியுங்கள்:
வரும் ஜூன் 3 அன்று நிகழ இருக்கும் கோள்களின் பவனி பற்றித் தெரியுமா?
Space

ஆரம்பத்தில் சூரியனின் மிக அருகில் இருப்பதால் சூரியனின் ஒளி வீச்சில் புதன், வியாழன் மற்றும் யுரேனஸ் மறைந்து தெரியாமல் இருக்கும். மாத இறுதியில் சூரியனிலிருந்து நகர்ந்து வரும் சமயம் இந்த வானியல் அற்புதம் நிகழும் என விஞ்ஞானிகள் கூறினார்கள். இந்த வானியல் அற்புதம் நிகழ்வதற்குக் காரணம் சூரியனைக் கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருப்பதும் பூமி தன்னை தானே சுற்றும்பொழுது ஒன்றுடன் ஒன்று ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதும்தான்.

எது கிரகம், எது நட்சத்திரம் என்று குழப்பம் வருகிறதா? இதனைக் கண்டுபிடிப்பது சுலபம். ஏன் எனில் நட்சத்திரங்கள் மின்னும். ஆனால் கிரகங்கள் மின்னாது. அவை சூரியனின் ஒளியைப் பெற்று பளிச்செனக் காணப்படும்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த விண்வெளி நிகழ்வைக் கண்டுகளிக்க முடியும் என இந்திய வானியற்பியல் மைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அரிதான நிகழ்வைக் காணமுடிந்தால் உங்கள் பகுதியில் சூரியன் உதிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக அலாரம் வைத்துக் கண்டுகளியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com