Biotechnology: மரபணு மாற்றத்தின் மூலம் சாத்தியமாகும் மிராக்கிள்!

Biotechnology
Biotechnology and genetic modification
Published on

யிரி தொழில்நுட்பம் (Biotechnology) என்பது மனித வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், உயிரியல் செயல்முறைகள், உயிரினங்கள், செல்கள் அல்லது அவற்றின் கூறுகளைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களையும் பயனுள்ள பொருட்களையும் உருவாக்கும் அறிவியல் துறையாகும். இது உணவு உற்பத்தி (பயிர்பெருக்கம்), மருத்துவம் (தடுப்பூசிகள், மரபணு சிகிச்சை), சுற்றுச்சூழல் (மாசுக்கட்டுப்பாடு) மற்றும் தொழில் துறைகளில் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உயிரி தொழில்நுட்பம் என்பது உயிரினங்கள் மற்றும் அவற்றின் கூறுகளைப் பயன்படுத்தி மனித குலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பமாகும்.

உயிரி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்:

உயிரி தொழில்நுட்பவியல் பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் முதன்மையான பயன்பாடுகள்:

1. மருத்துவத் துறை:

நோய்களைக் கண்டறியவும், மரபணு சிகிச்சை மூலம் பரம்பரை நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. இன்சுலின் போன்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிப்பில் இதன் பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவத்துறையில் மருந்து உற்பத்தி, இன்சுலின், தடுப்பூசிகள் (ஹெபடைடிஸ் பி), நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மேம்பட்ட காயப் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு போன்றவை, குறைபாடுள்ள மரபணுக்களை சரி செய்து, அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் எனும் மரபணு சிகிச்சை, மரபணு சோதனைகள் மூலம் நோய்களைக் கண்டறிதல், தடயவியல் மற்றும் பிறந்த குழந்தை பரிசோதனைகள் ஆகியவை.

2. விவசாயத்துறை:

அதிக மகசூல் தரும் பயிர் வகைகளை உருவாக்குதல் (பசுமைப் புரட்சி). பூச்சிகள், நோய்களை எதிர்க்கும் பயிர்களை உருவாக்குவதுடன், வறட்சியைத் தாங்கும் பயிர்களை உருவாக்குதல், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பயிர்களை உருவாக்குதல்.

3. சுற்றுச்சூழல் துறை:

கழிவுகளை சிதைக்கும் நுண்ணுயிர்களைப் பயன்படுத்துதல், உயிரி எரிபொருட்கள் தயாரித்தல். கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் கசிவுகளை அகற்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் 'உயிரியத் தீர்வு'(Bioremediation) முறையில் இது பயன்படுகிறது.

மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் பொருட்களை சிதைக்க நுண்ணுயிரிகளை பயன்படுத்துதல். தாவரக் கழிவுகளில் இருந்து எத்தனால் மற்றும் பயோடீசல் போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களை குறைத்தல் போன்ற மாசு கட்டுப்பாட்டுகளை செயலாக்குதல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உயிர்காரணிகள் கொண்டு ஒடுக்கவும், அதனை மறுசுழற்சி முறைகள் மூலம் பொருளாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

4. தொழில்துறை மற்றும் பிற பயன்பாடுகள்:

தொழில்துறையில் என்சைம்களைப் பயன்படுத்தி மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் சலவை சோப்பு போன்றவற்றை தயாரிக்க உயிரி தொழில்நுட்பம் உதவுகிறது. உயிரி எரிபொருளான பயோ-மீத்தேன், பயோ-டீசல் தயாரிப்பு.

இதையும் படியுங்கள்:
2025 REWIND: விஞ்ஞானிகளே மிரண்டு போன கண்டுபிடிப்புகள்!
Biotechnology

5. உணவு பதப்படுத்துதல்: நொதித்தல் (fermentation) மற்றும் பிற செயல்முறைகளில் பயன்படுதல், தோல் பதனிடுதல், துணி சாயம் நீக்குதல் போன்ற ஆடை தயாரிப்பு செயல்முறைகளில் பயன்படுதல்.

6. தடயவியல் (Forensics):

குற்றவாளிகளைக் கண்டறியவும், தந்தைவழி சோதனைகளை மேற்கொள்ளவும் DNA கைரேகை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com