

குற்றவியல் விசாரணை உலகில், மனிதன் சொல்வது உண்மையா, பொய்யா? என்பதை அறிய பல வகையான முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், உடலின் உடனடி மாற்றங்களை அறிவியல் ரீதியாக பதிவு செய்து, விசாரணைக்கு ஆதாரம் தரும் முதல் கருவியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் John Augustus Larson.
1921 ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய Modern Polygraph கருவி, போலீஸ் விசாரணையில் ஒரு பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது. Larson உருவாக்கிய இந்த சாதனம், இதய துடிப்பு, ரத்த அழுத்தம், மூச்சு விடும் விகிதம் போன்ற உடல் செயல்பாடுகளை ஒரே நேரத்தில் அளவிட்டு, விசாரணையை அறிவியல் மயமாக்கியது. இன்றும் உலகம் முழுவதும் “Lie Detector Test” என அறியப்படும் இந்த கருவி, குற்ற விசாரணை துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய முக்கிய கண்டுபிடிப்பாக திகழ்கிறது.
Polygraph Machine கருவியின் தோற்றம்:
Polygraph என்ற கருவி 19 ஆம் நூற்றாண்டிலேயே இருந்தது. மனிதன் பொய் சொன்னால் உடலில் சில உடனடி மாற்றங்கள் ஏற்படும் என்பதை முதலில் கவனித்தவர் Cesare Lombroso (இத்தாலி) – 1895. அவர் “Hydrosphygmograph” என்ற கருவியை உருவாக்கினார். இது ரத்த அழுத்த மாற்றங்களை மட்டும் அளவிடும்.
எல்லா உடல் மாற்றங்களையும் ஒரே கருவியில் பதிவு செய்யும் சாதனத்தை முதன்முதலில் உருவாக்கியது John Augustus Larson. இவர் அமெரிக்காவில் போலீஸ்காரராகவும், பின்னர் மருத்துவ மாணவராகவும் இருந்தவர். மனவியல், உயிரியல், மருத்துவம் ஆகிய துறைகளில் நுட்பமான அறிவு கொண்டிருந்தார்.
1921 – Modern Polygraph உருவாக்கம்:
1921-ல் Larson, இதய துடிப்பு, ரத்த அழுத்தம், மூச்சு விடும் விகிதம் இந்த மூன்று உடல் செயல்பாடுகளையும் ஒரே நேரத்தில் வரைபடமாக பதிவு செய்யும் கருவியை உருவாக்கினார். இதுவே இன்று நாம் பயன்படுத்தும் “Modern Polygraph” கருவியின் ஆரம்ப வடிவம். இந்த கருவி “Larson Polygraph” என்று அழைக்கப்பட்டது.
Larson இன் கண்டுபிடிப்பு:
முதல் முறையாக multi-channel physiological recorder உருவாக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அறிவியல் ஆதாரத்தை கொண்டு வந்தார். 1921-இல் Berkeley, California-வில் உள்ள பள்ளி மாணவர்களின் திருட்டு வழக்கு பரிசோதனையின் போது பயன்படுத்தப்பட்டது.
இந்த பரிசோதனை வெற்றி பெற்றதால் Polygraph கருவி அமெரிக்க முழுவதும் பிரபலமானது. “Lie Detector” என்ற சொல் அவருக்குப் பிடிக்கவில்லை John Larson தொடர்ந்து கூறினார், “Polygraph கருவி பொய்யை நேரடியாக கண்டுபிடிப்பதில்லை; உடலின் stress மாற்றங்களை மட்டும் பார்க்கிறது.” அதனால் அவர் “Lie Detector” என்று அழைப்பது தவறு என்று வலியுறுத்தினார்.
1930–40களில் Keeler, Backster ஆகியோர் கருவியை மேம்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்தார்.
Larson க்கு பிறகு Leonarde Keeler (1938):
Polygraph எந்திரத்தில் GSR – Galvanic Skin Response இணைத்தார். இது உடலின் வியர்வை செயல்பாட்டை அளவிடுகிறது. இதுவே இன்று பயன்படுத்தப்படும் polygraph இன் முக்கிய பகுதி.
Cleve Backster (1960):
“Zone Comparison Test” என்ற modern question technique உருவாக்கினார். FBI, CIA இன்று பயன்படுத்தும் முக்கிய முறைகள் இதன் அடிப்படையில் உள்ளது. Larson இன் கருவி இன்று பல நாடுகளில் காவல்துறை, உளவுத்துறை, பாதுகாப்பு துறை, வேலைவாய்ப்பு சோதனைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
Polygraph கருவியின் வரலாறு அறிவியல் அறிவை காவல்துறையுடன் இணைத்த ஒரு புதுமை முயற்சி. John Augustus Larson உருவாக்கிய 1921-ம் ஆண்டு Polygraph கருவி, குற்ற விசாரணையில் புதிய பாதையைத் திறந்தது.