
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளனர். குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை அறிவியல் துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த சாதனைகள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ள. பல துறைகளில் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது.
அணுசக்தி:
அணுசக்தி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. வெளிநாட்டு எரிசக்தி ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைத்து, உள்நாட்டு அணுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பை இந்தியா உறுதி செய்கிறது. உள்நாட்டிலேயே அணு உலைகளை உருவாக்கி, மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பாதுகாப்பு சாதனைகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. செயற்கைக் கோள்களை ஏவுதல், நிலவு மற்றும் செவ்வாய் பயணங்கள் போன்ற திட்டங்களில் இந்தியா முன்னேறி வருகிறது. இதில் உலகிலேயே மிகக் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இஸ்ரோ விண்வெளி நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களையும் கொண்டுள்ளது. இஸ்ரோவின் கீழ் பல ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதில் முக்கியமானது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்.
தகவல் தொழில்நுட்பம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மென்பொருள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. உலகளாவிய ஐடி மையமாக இந்தியா அறியப்படுகிறது. மேலும் டிஜிட்டல் புரட்சியில் இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு ஐடி சேவைகளை வழங்கி வருகின்றன.
அடிப்படை அறிவியல்:
அடிப்படை அறிவியல் துறைகளில் குறிப்பாக கணிதம், வானியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இயற்கை தத்துவம் போன்ற துறைகளில் இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக முக்கிய பங்காற்றியுள்ளனர். உலகிற்கு பல அடிப்படை அறிவியல் கோட்பாடுகளையும், அணுகுமுறைகளையும் வழங்கியுள்ளது. சி.என்.ஆர் ராவ் போன்ற விஞ்ஞானிகள் அடிப்படை அறிவியலில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வேளாண்மைத் துறை:
வேளாண்மைத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் ஈட்டவும், உற்பத்தி செலவுகளை குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முடிகிறது. செயற்கைக்கோள் படங்கள், ரிமோட் சென்சிங் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் கருவிகள் மண்வளத்தைப் பற்றிய தகவல்களைப் பெறவும், பயிர் வளர்ச்சியை கண்காணிக்கவும் துல்லியமான நீர்ப்பாசனத்தை வழங்கவும் உதவுகின்றன.
அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் பிற இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயப் பணிகள் வேகமாக முடிக்கப்படுகின்றன. இதனால் உழைப்புச் செலவுகளும் குறைகிறது.
உள்கட்டமைப்பு:
சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
நவீன தொழில் நுட்பங்கள்:
கல்வி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.