2035-ல் சொந்தமாக விண்வெளி நிலையம்... 2040-ல் நிலவில் இந்தியர்...இஸ்ரோ தலைவர் உறுதி..!

வரும் 2040-ல் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் நாராயணன்
இஸ்ரோ தலைவர் நாராயணன்img credit- en.wikipedia.org
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகள் தேர்வின் தொடக்க நிகழ்ச்சியான பூமியின் புன்னகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மண்ணில் இருந்து இதுவரை 4000 ஒலி எழுப்பும் ராக்கெட்டுகளை அனுப்பியுள்ளோம். கடந்த 50 ஆண்டுகளில் நாம் 131 செயற்கை கோள்களை வடிவமைத்து தயாரித்து அனுப்பியுள்ளோம்.

சந்திரயான் -3 முதன் முதலில் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியில் முதல் முறையில் வெற்றியடைந்தது மற்றும் 104 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து அனுப்பி வெற்றி அடைந்த முதல் நாடும் இந்தியா தான்.

செயற்கைகோள்களை மேலே கொண்டு செல்ல சக்தி வாய்ந்த ராக்கெட் என்ஜின் வேண்டும். அதற்கான கிரயோஜெனிக் தொழில் நுட்பத்தை பிறநாடுகள் தரமறுத்த நிலையில், கிரயோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.

இதையும் படியுங்கள்:
‘இஸ்ரோ’ விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாகக் காரணமாக இருந்த விஞ்ஞானி!
இஸ்ரோ தலைவர் நாராயணன்

அதில் 3 எந்திரங்கள் செய்து உலகில் 6-ல் ஒரு நாடாக வளர்ந்துள்ளோம். 2035-ல் விண்வெளியில் நாம் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க உள்ளோம். 2040-ல் இந்தியரை நமது ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி, திரும்பி கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதையடுத்து, கன்யான் திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக 40 மாடி உயரமுள்ள ஒரு ராக்கெட்டை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 2600 டன் எடையுள்ள அந்த ராக்கெட், 75 ஆயிரம் கிலோ எடையை சுமந்து மேலே செல்லும். இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் நமக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.

இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் விண்வெளிக்கு சென்றதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. தற்போது மீண்டும் நமது இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பினால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் சுபான்ஷூ சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 15 நாட்கள் ஆய்வு பணிக்காக அனுப்பியுள்ளோம். அவர் வந்த பிறகு அவருக்கு கிடைத்த அனுபவங்கள் நமக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இந்தியா செயற்கைக்கோள் ஏவுதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பாரதிய அந்தர்திக்ஷ் ஸ்டேஷன் என்ற பெயரில் இந்தியா விண்வெளியில் மையம் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களுக்கு இஸ்ரோ அளிக்கும் பயிற்சி… விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்!
இஸ்ரோ தலைவர் நாராயணன்

இது இஸ்ரோவின் லட்சியத் திட்டம் என்றும், 2035ம் ஆண்டுக்குள் ஐந்து தொகுதிகளைக் கொண்ட முழுமையாக செயல்படும் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நீண்டகால மனித விண்வெளி பயணங்கள் மற்றும் நுண் ஈர்ப்பு விசை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com