அவசர கால நேரங்களில் விமானத்தில் கையாளப்படும் நடவடிக்கைகள்!

Flight
Flight
Published on

என்னதான், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பயணம் என்று வந்து விட்டால் அது சாலை மார்கமாகவோ அல்லது காற்றில் பார்ப்பதோ எதுவாக இருந்தாலும், ஒரு சிறிய பதற்றம் நமக்குள் ஏற்படத்தான் செய்யும். அதற்கு ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் சில விபத்துகளும் காரணமாகும். எந்த ஒரு விபத்தும் எதிர்பார்த்து நடப்பதில்லை. அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகள் இருந்தால் அந்த விபத்தை சமாளித்துவிடலாம். அப்படி விமானங்களில் இது போல் நேர்ந்தால் என்ன நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பயணிகள் விமானங்கள், எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்பட்டால், விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாக்கவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பலவிதமான பாதுகாப்பு மற்றும் அவசர திட்டங்களை உருவாகியுள்ளன. இந்த திட்டங்களின் ஒரு பகுதி, விமானம் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விளக்கங்களிலிருந்து ஆரம்பிக்கிறது, அதில் அவசரகால வெளியேற்றங்கள்(emergency exits), உயிரை காப்பாற்ற கூடிய உடைகள்(life vests) மற்றும் வெளியேற்றும் நடைமுறைகள்(evacuation procedures) ஆகியவற்றைப் பற்றி தெரிவிப்பார்கள். ஒவ்வொரு முறையும் புறப்படுவதற்கு முன், விமானப் பணிப்பெண்கள் சீட் பெல்ட்கள், ஆக்ஸிஜன் முகமூடிகள் மற்றும் லைஃப் வெஸ்ட்களை(life vests) எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற பாதுகாப்பு விளக்கத்தை வழங்குகிறார்கள். பின் பயணிகளுக்கு அவசரகால வெளியேற்றங்களின் இடங்கள் மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு சமாளிக்கலாம் போன்றவற்றை நேரடியாகவோ அல்லது அந்தந்த இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள பிரத்தியேக திரைகளின் வாயிலாகவோ தெரிவிப்பார்கள்.

ஏதோ ஒரு அசம்பாவிதங்களால் அவசர நிலை ஏற்பட்டால், பயணிகள் விமானத்தில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வெளியேற்ற ஸ்லைடுகள்(evacuation slides) பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் நீர்நிலைகளில் தரையிறக்கப்பட்டால் லைஃப் ஜாக்கெட்கள்( Life Jackets) அந்நேரத்தில் வழங்கப்படுகின்றன, மேலும், கேபின் உள்ளே காற்றின் அழுத்தங்கள் குறைந்தால் ஆக்ஸிஜன் முகமூடிகள்( Oxygen Masks) தானாகவே விழும்படியான தொழில்நுட்பம் சார்ந்த வசதியுள்ளது. மேலும், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் ஆகியவை தீ விபத்துகள் அல்லது மருத்துவ தேவை அவசரங்களை கையாள உபயோகிக்கப்படுகின்றன .

இதையும் படியுங்கள்:
6 லட்சம் பேர் பணிபுரியும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்!
Flight

எதிர்காலத்தில் விமானங்களில் வரவிருக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்:

பாதுகாப்பை மேம்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, செல்லுகின்ற வழிகளை(Navigation) மேம்படுத்தவும், சில நேரங்களில் மனிதர்களால் நிகழும் அபாயத்தைக் குறைக்கவும் மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்புகள்(Advanced avionics) உருவாக்கப்பட்டு வருகின்றன. சௌகரியமான விமான பயண அனுபவத்தை வழங்குவதற்கும், வானில் பறந்து கொண்டிருக்கும் போது உண்டாகும் அதிர்வுகளால் பயணிகளுக்கு காயங்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் 'தார்புலென்ஸ் குறைப்பு அமைப்புகள்' (Turbulence reduction systems) சோதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் முழுவதுமாக ஹைட்ரஜனில் இயங்கும் விமானங்களும் சோதனையில் உள்ளன. இந்த விமானங்களை பயன்படுத்துவதால், விமான உமிழ்வை குறைக்கவும், எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும். அதோடு, செயற்கை நுண்ணறிவு (AI) படிப்படியாக அனைத்து விமான நிலைய செயல்பாடுகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது, இதனால் பயோமெட்ரிக் போர்டிங்(biometric boarding) பதிலாக AI யில் இயங்கும் அமைப்புகள் மூலம் பயணிகளின் பற்றிய தரவுகள் விரைவாக சோதிக்கப்பட்டு, அவர்களின் பயண நேரத்தையும் விமான நிலைய கூட்ட நெரிசலையும் குறைக்க முடியும்.

இப்படி விமான துறையில் நிகழும் முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் விமானப் பயணம் மேலும் பாதுகாப்பானதாகவும், சுலபமானதாக வும் மாற்றுகின்றன. இதனால், அனைத்து விமானப் பயணிகளும், எண்ணற்ற நிம்மதியுடனும் , உற்சாகத்துடனும் தங்கள் பயண அனுபவத்தை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com