நட்சத்திர மீன் வடிவில் இருக்கும் பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று. தற்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் டாக்சிங் பகுதியில் இயங்கி வருகிறது. இது 97 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவிற்கு இணையான பரப்பளவு கொண்டது. இந்த விமான நிலையம் கட்டுவதற்காக 11 கிராமங்களில் இருந்து ஏறத்தாழ 20,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
2014-ம் ஆண்டு தொடங்கி 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் உழைப்பில் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. இவ் விமான நிலையம் மூலம் ஆண்டுக்கு 7 கோடியே 20 லட்சம் பயணிகள் பயனடைய முடியும். அதோடு 20 லட்சம் டன் சரக்குகளையும் கையாள முடியும்.
இந்த விமான நிலையத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இங்கு வரும் பயணிகள் எந்த ஆதாரங்களையும் காகித வடிவில் கொண்டு வரத்தேவையில்லை. முக அடையாள தொழில் நுட்பம் மூலமாக இயங்கும் விமான நிலையம் இது. 5G தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்திய விமான நிலையம்.
பெய்ஜிங் டாக்சிங் நகரத்திலிருந்து தெற்கே சுமார் 29 மைல் தொலைவில் உள்ளது. இது ஈரான் கட்டிடக் கலைஞர் ஜஹா ஹடிட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது பிரதான முனையம் மற்றும் நான்கு ஓடுபாதைகள் உட்பட 18 சதுர மைல்கள் வரை பரவியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக விளங்குகிறது. நகரின் வடக்கே உள்ள பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்ட நெரிசலைக் குறைக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையம் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி திறக்கப்பட்டது. இருப்பினும், மார்ச் 14, 2020 முதல் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காரணமாக, டாக்சிங் விமான நிலையம் வழியாக செல்ல வேண்டிய அனைத்து விமானங்களும் பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது மீண்டும் இயங்குகிறது.
பெய்ஜிங்கிலிருந்து தெற்கே 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பரந்த விமான நிலையம் தற்போது ஏழு ஓடுபாதைகளைக் கையாளுகிறது. 60 உலகளாவிய விமான நிறுவனங்கள் இங்கு விமான சேவைகள் வழங்குகிறது. இந்த விமான நிலையத்தை தரைவழியாக சீனாவின் பெரும் நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அடியில் இரண்டு ரயில் நிலையங்கள் மற்றும் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது இந்த விமான நிலையம்.