இது என்ன James Bond காரா? ரிமோட்லயே ஓட்டலாம்னு சொல்றாங்களே!

Afeela EV Car
Afeela EV Car

நாம் நினைத்து பார்க்க முடியாத பல சாதனைகளை இன்றைய தொழில்நுட்பம் வாயிலாக அறிவியல் நிகழ்த்திக் காட்டி வருகிறது. அந்த வரிசையில் ஜப்பானின் தலைசிறந்த இரண்டு நிறுவனங்களான Honda மற்றும் Sony இணைந்து புதிய எலக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. 

இந்த இரு நிறுவனங்களும் கைகோர்த்து முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன எலக்ட்ரிக் காரை உருவாக்கி வருகின்றனர். அந்த வாகனம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை அனைவருக்கும் காட்சிப்படுத்தி ஆட்சியரத்தில் ஆழ்த்தியுள்ளது அந்நிறுவனம். 

Afeela EV Car என்ற மின்னணு கார் தொடர்பான தகவல்கள் வெளிவர ஆரம்பித்திலிருந்து மக்களுடைய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், சமீபத்தில் நடந்த CES 2024 மாநாட்டில் சோனி மற்றும் ஹோண்டா மொபிலிட்டியின் சிஇஓ Izumi Kawanishi, சோனி நிறுவனத்தின் பிரபலமான PS5 கண்ட்ரோலர் வாயிலாக அவர்கள் உருவாக்கிய எலக்ட்ரானிக் காரை இயக்கிக் காட்டினார். அதை பார்ப்பதற்கு ஜேம்ஸ் பாண்ட் தனது காரை இயக்குவது போல இருந்தது. அந்த மாநாட்டில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வை ஆச்சரியமாகப் பார்த்தனர். 

இதனால் இந்த காரை பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. கண்ட்ரோலரை பயன்படுத்தி இந்த கார் கம்பீரமாக வந்து மேடையில் நின்றது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இப்போது வரை இது ஒரு கான்செப்ட் காராக மட்டுமே இருக்கிறது. விரைவில் இந்த கார் முழுமை பெற்று நிஜமாகவே மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
Second Hand Car வாங்குவதால் பணம் சேமிக்க முடியுமா?
Afeela EV Car

Afeela EV Car-ஐ  PS5 கண்ட்ரோலர் பயன்படுத்தி இயக்க முடியும் என்பதைத் தாண்டி அதில் பல சிறப்புகளும் உள்ளது. இந்த All Wheel டிரைவ் கார் 400 கிலோ வாட் Duel மோட்டார் மூலமாக இயங்குகிறது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். குறிப்பாக 0-100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 வினாடிகளில் அடையும் எனக் கூறப்படுகிறது. 

மேலும், இந்த காரின் மிகச்சிறந்த ஆற்றலைத் தாண்டி, பல கவர்ச்சிகரமான கேமிங் அம்சங்களும் இதில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com