AI-ல குழந்தையா..? (உலகின் முதல் AI குழந்தை) இது எப்படி சாத்தியம்..?

AI - Baby
AI - Baby
Published on

செ. ஹரிஷ்

சாதாரணமாக பெண்கள் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம் போய், இப்போது இந்த நவீன தொழில்நுட்பமான AI உலகத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது! இது இந்த உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் இயற்கையாக கருத்தரிப்பு என்பது, ஆணினுடைய பல்லாயிரக்கணக்கான விந்தணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் நீந்திச் சென்று, முதலில் கருமுட்டையில் நுழையும் விந்தணுக்களே பின் கருவுற்று குழந்தையாக உருவாகிறது.

இப்போது இந்த காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிகள் IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இது எப்படி என்றால் ஆய்வக சூழலில் கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை, கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டையினுள் ஊசி மூலம் செலுத்தி கருவுற செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்ணின் கருப்பையினுள் பொருத்தி வளர செய்து, குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை சாத்தியமாக்குகிறது. இதன் சாத்தியத்தன்மை 35 சதவீதமே ஆகும். ஏனென்றால் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விந்தணுக்கள் கருமுட்டைகள் தன்மை மற்றும் ஊசியால் விந்தணுக்களை கருமுட்டையில் செலுத்தும் போது ஏற்படும் மனிதத் தவறுகள் என்று பல காரணங்கள், இந்த IVF-இன் சாத்தியத்தன்மையை குறைக்கின்றன.

இந்த குறைகளை நீக்கும் முயற்சியில் தற்போது மெக்சிகோ நாட்டில் உள்ள (conceivable life) என்ற செயற்கை கருத்தரிப்பு மையத்தில், AI மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின் மூலம் செலுத்தி வெற்றிகரமாக கருவுறச்செய்து, அந்த கருவுற்ற முட்டையை ஒரு 40 வயதான பெண்மணி ஒருவரின் கருப்பையினுள் பொருத்தி, குழந்தையை வளரச் செய்து கடந்த மார்ச் மாதம் நல்லபடியாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இதைப் பார்த்து, உலகில் முதன்முறையாக மெக்சிக்கோவில் AI-யால் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த AI தொழில்நுட்பத்தால் கருத்தரிக்க இயலாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிக மிக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது, என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தரப்பினர்கள் ஒரு AI எப்படி விந்தணுக்களை தேர்வு செய்ய முடியும்? இதை முற்றிலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது! என்றும், மற்றொரு தரப்பினர்கள் AI தொழில்நுட்பத்தால் மனிதனுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்றால் நல்லது தான் என்றும் கூறுகிறார்கள். பல வருடங்கள் குழந்தை இல்லாமல் பல்வேறு அவமானங்களைக் கடந்து இந்த சமூகத்தில் தங்களால் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையே... என்ற ஏக்கத்தோடு இருக்கும் தம்பதிகளுக்கு, இந்த AI தொழில்நுட்பமானது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்! அமையுமா?

இதையும் படியுங்கள்:
AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
AI - Baby

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com