
இன்ஸ்டாகிராமில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்டிக்கர் உருவாக்கும் முறை அறிமுகம்.
இன்றைய இளைஞர்களையும், மாணவர்களையும் பெரிதும் கவர்ந்திருக்க கூடிய முன்னணி சமூக ஊடகமாக விளங்குவது இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாதகமாக இன்ஸ்டாகிராம் இருப்பதால் இன்றைய இளம் வயதினருடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில், ஏஐ தொழில்நுட்பம் மூலமாக தாங்களாகவே ஸ்டிக்கரை உருவாக்கி அதை ஸ்டோரியாகவோ அல்லது ரீல்ஸாகவோ வெளியிடும் வண்ணம் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏஐ ஸ்டிக்கரை பயன்படுத்த புகைப்படம் அல்லது வீடியோக்களை தேர்வு செய்து கிரியேட் பட்டன் கிளிக் செய்து, பிறகு அதில் படம் அல்லது வீடியோவை ஆட் செய்து, யூஸ் ஸ்டிக்கரை கொடுத்தால், அது ஸ்டிக்கராக மாறி காட்சியளிக்கும். அவற்றை ஸ்டோரியாகவோ, ரிலீஸாகவோ வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய ஸ்டிக்கர்களை தாங்கள் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாது தற்போது உள்ள போட்டோ பில்டர்களை காட்டிலும் அட்வான்ஸாக 25 போட்டோ பில்டர்களை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போட்டோ பில்டர்கள் மூலம் புகைப்படங்களை தத்துரூபமாக எடிட் செய்து பயன்படுத்த முடியும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அப்டேட்டுகளும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.