தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் இந்த AI!

AI
AI

செயற்கை நுண்ணறிவு (AI) இன்று நம் வாழ்வின் ஒரு அங்கம்! எதைச் செய்தாலும், எதை உபயோகித்தாலும் அதில் (AI) ஐ புகுத்தி விடுகிறார்கள். இது நாம் வேலை செய்யும் விதத்திலும், தொடர்பு கொள்ளும் விதத்திலும் மற்றும் சிந்திக்கும் விதத்திலும் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, எந்ததெந்த வழிகளில் AI மனிதகுலத்திற்கு நன்மை தருகிறது என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்வோம்:

மேம்படுத்தப்பட்ட முடிவெடுத்தல்:

AI மூலம் மிகப்பெரிய தரவுகளை விரைவாகவும், துல்லியமாகவும் நம்மால் பெற முடிகிறது. இதனால் பல நேரங்களில் நம் உற்பத்தி திறன் அதிகமாகுதே தவிர குறைவதில்லை. மருத்துவத்துறையில் இருந்து நிதி சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு இதன் மூலம் தெளிவான முடிவை அனைவராலும் பெறமுடியும்.

செயல்திறன் மற்றும் ஆட்டோமேஷன்:

மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை AI மூலம் கட்டுப்படுத்துவதால் அதிலிருந்து உண்டாகும் தவறுகள் மற்றும் தொய்வுகள் தவிர்க்கப்படுகின்றன. அதையும் மீறி ஏதேனும் பிரச்னை வருவதாக இருந்தால் அதை நமக்கு முன்கூட்டியே உணர்த்தும் திறனும் அதற்கு உண்டு. இதனால் பல வழிகளில் உண்டாகும் இழப்புகளை நம்மால் தடுக்க முடியும்.

சுகாதார முன்னேற்றங்கள்:

AI ஆனது, மருத்துவ நிபுணர்களுக்கு நோய்களைக் கண்டறிவதிலிருந்து, ஆபத்துகளை முன்னறிவித்தல் மற்றும் அதற்கேற்ற சிகிச்சைத் திட்டங்களைத் அறிவுறுத்தல் போன்று பல வழிகளில் உதவுகிறது. மருத்துவத் துறை என்பது மனிதனின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சார்ந்தது. ஆகையால், மருத்துவ முடிவுகளைத் துல்லியமாகத் தருவதில் AI முக்கியப் பங்கு வகிக்கிறது. கதிரியக்க வல்லுநர்களால் (Radiologists) எடுக்கப்படும் மருத்துவப் படங்களை துல்லியமாக மற்றும் வேகமாக பகுப்பாய்வு(analyze) செய்ய AI அல்காரிதம்கள்(Algorithms) பயன்படுகின்றன.

தானியங்கி வாகனங்கள்:

டெஸ்லா(Tesla ) போன்ற நிறுவனங்கள் தானியங்கி கார்களை உற்பத்தி செய்கின்றன. இதில் மனிதர்கள் எங்கு போக வேண்டும் என்ற கட்டளை மட்டும் கொடுத்தால் போதும், இந்த கார் ‘ஸ்டீரிங் முதல் பிரேக்கிங்’ வரை அனைத்தையும் அதுவே தீர்மானித்து உங்களை அழைத்துச் செல்லும். இதன்மூலம் மனிதனால் ஏற்படக்கூடிய தவறுகள் தவிர்க்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தனிப் பாதையை உண்டாக்கும் VPN சேவை - இது மிக அவசியம்!
AI

காலநிலை மாற்ற தீர்வுகள்:

AI மாதிரிகள் காலநிலை வடிவங்களைக் கணிக்கின்றன. இதன்மூலம் முடிந்தவரை ஒரு தெளிவான முடிவுகளை ஆராய்ச்சியாளர்களால் கொடுக்க முடிகிறது. காரணம் செயற்கைக்கோள்கள் மூலம் அனுப்பப்படும் தரவுகளைப் பகுப்பாய்வு(analyze) செய்து காடழிப்பு (deforestation), காற்று மாசுவின் அளவு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிப்பதில் இன்றைய காலகட்டத்தில் AI முக்கிய பங்கு வகிக்கிறது.

உள்கட்டமைப்பு மேம்படுத்தல்:

ஸ்மார்ட் நகரங்களாக எல்லா நகரங்களும் மாற்றப்படுவதால், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் AIஆல் நிர்வகிக்கப்படுகின்றன. இதன்மூலம் குறைவான ஆற்றல் பயன்பாடு, முன்கூட்டியே பராமரிப்புகளை மேற்கொள்வது போன்ற விஷயங்கள் சாத்தியமாகின்றன.

AI அபரிமிதமான நன்மைகளை வழங்கும் அதேவேளையில், அது பல பிரச்னைகளையும் எழுப்புகின்றன. எடுத்துக்காட்டிற்கு தானியங்கி கார்கள் செயல்பாட்டில் இருந்தாலும் மக்கள் அதை அச்சத்துடன்தான் பார்க்கிறார்கள். காரணம் அதன் மூலம் வரும் எதிர்பாராத விபத்துகள். அது போக AI மூலம் பல்வேறு துறைகளில் ‘சின்ன சின்னத் தவறுகள் தலைதூக்கதான் செய்கின்றன’. இதெல்லாம் தாண்டி இறுதியாக AI வந்துவிட்டதால் மனிதர்கள் வேலை இழக்க நேரிடும் என்ற வதந்தி அனைவராலும் பரப்பப்படுகிறது. மேலே குறிப்பிட்ட AI மூலம் உருவாகும் தவறுகளை மனிதன்தான் சரி செய்ய வேண்டும் என்ற நிலை என்றைக்கும் தொடரும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com