Alpenglow நிகழ்வு: இந்து குஷ் மலையில் நடந்த அதிசயம்.. வைரலாகும் NASA-வின் புகைப்படங்கள்! 

Alpenglow Phenomenon
Alpenglow Phenomenon

சமீபத்தில் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ‘லாரா ஒ ஹாரா’ என்ற விண்வெளி வீராங்கனை இந்து குஷ் மலைத் தொடருக்கு அருகில் நிகழ்ந்த Alpenglow Phenomenon என்ற நிகழ்வின் சில அற்புதமான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஒ ஹாரா இந்த அற்புதமான நிகழ்வை ‘மேஜிக்கல்’ என விவரித்து அதன் கண்கவர் படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இதுவரை நூற்றுக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான பார்வைகளையும் பெற்று வைரலானது.  

Alpenglow Phenomenon என்றால் என்ன? 

Alpenglow Phenomenon என்பது ஒரு அழகான ஒளியியல் நிகழ்வு. இது சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது மலைப்பகுதிகளில் நிகழ்கிறது. இந்த நிகழ்வு நடக்கும்போது மலை சிகரங்களில் சூரிய பிரதிபலிப்பு பட்டு, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளக்கும். 

Alpenglow என்ற பெயர் ஜெர்மன் வார்த்தையான Alpengühen என்பதிலிருந்து வந்ததாகும். சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும் சமயத்தில் அதன் கதிர்கள் குறைந்த கோணத்தில் பூமியின் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது, இந்த அற்புதமான நிகழ்வு நடக்கிறது. இந்த வளிமண்டல சிதறலானது ஒளியின் நீலம் மற்றும் பச்சை அலை நீளங்களை மறையச் செய்து, சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களை நமது கண்களுக்கு தெரியச் செய்கிறது. இதன் விளைவாக மலைகளின் மேற்பரப்பு பிரகாசமாக ஜொலிக்கிறது. 

இதையும் படியுங்கள்:
மெக்சிக்கன் ட்ரிப் செல்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 8 மெக்சிக்கன் உணவுகள்!
Alpenglow Phenomenon

மேலும் வளிமண்டலத்தில் உள்ள தூசி மாசுபாடு மற்றும் ஈரப்பதம் போன்றவையும் இந்த நிகழ்விற்கு முக்கிய காரணியாக உள்ளது. அத்துடன் புவியியல் இருப்பிடம் மற்றும் வானிலை நிலைமைகளைப் பொருத்தும் இவை மாறுபடும். புகைப்பட கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு Alpenglow ஒரு அற்புதமான நிகழ்வாகும். 

ஏனெனில் இது பார்ப்பதற்கு மிகவும் ரம்யமான சூழலை உருவாக்குகிறது. பெரும்பாலும் இமயமலை, ராக்கி மலைகள் போன்ற மிகப் பெரிய மலைப்பகுதி மற்றும் சிகரங்களை சுற்றியுள்ள நிலைப்பரப்புகளுக்கு இடையே உயர வேறுபாடுகள் உள்ள பகுதிகளில் இந்த நிகழ்வு அதிகம் நடக்கிறது. 

இப்போது இந்து குஷ் மலைத் தொடர்களில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு, பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com