அதிசய உருண்டை பூமி: நமக்கே தெரியாத ஆச்சரியமான உண்மைகள்!

Surprising facts
Surprising facts
Published on

பூமி என்பது பல அதிசயமான விஷயங்களை உள்ளடக்கிய ஒரு உருண்டை வடிவ கிரகமாகும். பூமியானது உருண்டை வடிவத்தில் உள்ள ஒரு கிரகம் என்பதை கண்டுபிடிக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின. அப்படியென்றால் அதுகுறித்த பல புதிராக விஷயங்களுக்கு விடை கண்டுபிடிக்க எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கோள்களின் பெயர்கள் பொதுவாக கிரேக்க மொழி அல்லது ரோமன் மொழியிலேயே சூட்டப்பட்டிருக்கும். ஒன்பது கோள்களில் பூமிக்கு மட்டுமே ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியானது 77 சதவிகிதம் நைட்ரஜனையும் 21 சதவிகிதம் ஆக்சிஜனையும் மிகச்சிறிய அளவில் ஆர்கான், கார்பன்டை ஆக்ஸைடு, நீர் மற்றும் சில வாயுக்களையும் உள்ளடக்கி அமைந்துள்ள ஒரு உருண்டை வடிவ அமைப்பாகும்.

பூமியானது சூரியனிலிருந்து 149 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பூமி சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயமே. சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 365.25 நாட்கள் ஆகும். பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு மிகச்சரியாகச் சொல்ல வேண்டுமானால் 365.24219 நாட்களை எடுத்துக்கொள்கிறது. சூரியனில் இருந்து புறப்படும் ஒளியானது பூமியை வந்து அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் சரியாக 8 நிமிடங்கள் 17 வினாடிகள் ஆகும்.

பூமியானது 24 மணிநேரத்திற்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வருகிறது. பூமியின் விட்டம் 12,756 கிலோமீட்டர்கள் ஆகும். பூமியானது தன்னுடைய சுற்றுப்பாதையில் மணிக்கு 67,000 மைல்கள் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுமட்டும் இல்லாமல் பூமியானது மணிக்கு 1000 மைல்கள் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியின் மொத்த எடை 5,974,000,000,000,000,000,000 டன்களாகும். நிலாவானது பூமியைவிட அளவில் 400 மடங்கு சிறியது. பூமிக்கும் நிலாவிற்கும் இடையே உள்ள தொலைவு 2,36,000 மைல்கள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
பூமியைப் போல 140 டிரில்லியன் மடங்கு பிரம்மாண்ட கடல்... விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிரடி ரகசியம்!
Surprising facts

பூமி சூரியனில் இருந்து மூன்றாவதாக அமைந்துள்ள ஒரு கிரகமாகும். பூமியை சுமார் 4000 செயற்கைக் கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பூமியின் சராசரி வெப்பநிலை 55.4 டிகிரி பாரன்ஹீட்களாகும். பூமியின் மையப்பகுதியின் வெப்பநிலை 5500 டிகிரி செல்ஷியஸ் ஆகும். 5500 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்யும்போதே பயமாக இருக்கிறது.

பூமியில் இருக்கும் மொத்த தண்ணீரில் 97.2 சதவீதம் உப்புத் தண்ணீர் ஆகும். பூமியில் இருக்கும் மொத்த தண்ணீரில் 1 சதவிகித தண்ணீரே நாம் குடிக்க பயன்படுத்தும் தண்ணீர் ஆகும்;.

பூமியிலே வருடாவருடம் சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக சுமாராக 50000 பூகம்பங்கள் ஏற்படுகிறது. பூமியின் காந்த சக்தி வருடா வருடம் குறைந்துகொண்டே வருவதாக கண்டறிந்திருக்கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் காந்த சக்தியானது 6 சதவீதம் குறைந்துள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பூமியில் மிகவும் வெப்பமான பகுதி லிபியாவில் உள்ள அசிசியா என்ற பகுதியாகும். இங்கு 13 செப்டம்பர் 1922 அன்று அதிகபட்சமாக 57.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. பூமியில் மிகவும் குளிர்ச்சியான பகுதி அண்டார்டிகாவில் அமைந்துள்ள வோஸ்டாக் எனும் பகுதியாகும். இங்கு 21 ஜீலை 1983 அன்று –89 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சி பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு 'கண்ணுக்குத் தெரியாத' டிஸ்ப்ளே.! மொபைல் உலகை அதிர விடும் சாம்சங்கின் புதிய வசதி.!
Surprising facts

உலகிலுள்ள சுரங்கங்களில் அதிக ஆழமுள்ள சுரங்கமானது 3.3 கிலோமீட்டர் ஆழமே உள்ளது. பூமியில் 15 கிலோமீட்டர் ஆழத்திற்கு மேல் இதுவரை தோண்ட முடியவில்லை. எனவே இதற்கு மேல் உள்ள பகுதிகளைப் பற்றிய கண்டுபிடிப்புகளெல்லாம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை வைத்தே உருவாக்கப்பட்டதாகும்.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தற்போது உள்ள கண்டங்கள் அனைத்தும் தற்போது போல இல்லாமல் ஒரே பெரிய கண்டமாக இருந்ததாகக் கூறுகிறார்கள். இந்த சூப்பர் கண்டமானது (Super Continent) பான்ஜியா (Pangaea) என்று அழைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com