வந்தாச்சு 'கண்ணுக்குத் தெரியாத' டிஸ்ப்ளே.! மொபைல் உலகை அதிர விடும் சாம்சங்கின் புதிய வசதி.!

Private Display in Samsung Phones
Samsung S26 Series
Published on

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மொபைல் போன்களிலும் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் மொபைல் போன்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது சாம்சங் தனது S26, S26+ மற்றும் S26 அல்ட்ரா உள்ளிட்ட மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போன்களில் பிரைவேட் டிஸ்ப்ளே (Private Display) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகமான சாம்சங்கின் இந்த புதிய மாடல் மொபைல் போன்கள், வருகின்ற மார்ச் 11ஆம் தேதி முதல் அந்நாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

அறிமுகமான இரண்டு நாட்களிலேயே மொபைல் போன் சந்தையில் பேசுபொருளாக மாறி இருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் S26 சீரிஸ் போன்கள். இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, இதில் இருக்கும் தனித்துவமான பிரைவேட் டிஸ்ப்ளே (Private Display) என்ற புதிய தொழில்நுட்ப வசதி தான்.

இந்த புதிய வசதியின் மூலம், நாம் மொபைல்போனைப் பயன்படுத்தும் போது, அருகில் இருப்பவர்களால் கூட நம்முடைய மொபைல்போன் திரையைப் பார்க்க இயலாது. பொதுவெளியில் மொபைல்போனை பயன்படுத்தும் போது, அருகில் இருப்பவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நமது மொபைல்போன் திரையை பார்ப்பதுண்டு. ஆனால் சாம்சங் S26 சீரிஸ் போன்களைப் பயன்படுத்தும் போது, யாராலும் நமது மொபைல்போன் திரையைப் பார்க்க முடியாது என்பதே இதன் சிறப்பம்சம்.

இதற்காகவே ஏஐ தொழில்நுட்பத்தில் பிரைவேசி டிஸ்ப்ளே என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் S26 சீரிஸ் போன்களின் விலை இந்திய மதிப்பில் ரூ.89,173 முதல் ரூ. 1,39,999 வரை இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

வெள்ளை, கருப்பு, ஸ்கை ப்ளூ, கோபால்ட் வயலெட், சில்வர் ஷேடோ மற்றும் பிங்க் கோல்டு உள்ளிட்ட ஆறு வகையான நிறங்களில் சாம்சங் S26 சீரிஸ் போன்கள் விற்பனைக்கு வர உள்ளன.

விலைப் பட்டியல்:

* சாம்சங் S26 ஆரம்ப விலை - 3,599 திர்ஹாம் (ரூ. 89,173)

* சாம்சங் S26+ ஆரம்ப விலை - 4,299 திர்ஹாம் (ரூ.1,06,517)

* சாம்சங் S26 அல்ட்ரா ஆரம்ப விலை - 5,099 திர்ஹாம் (ரூ.1,26,339).

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING: திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.! தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்.!
Private Display in Samsung Phones

அடுத்த மாதம் 11-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் S26 சீரிஸ் போன்கள், விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய சந்தையில் சாம்சங் மொபைல்போன்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு கிடைக்கும். அவ்வகையில் தற்போது பிரைவேட் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி ஆதார் சென்டர் தேடி அலைய வேண்டாம்! கூகுள் மேப்ஸில் வந்தாச்சு புதிய வசதி!
Private Display in Samsung Phones

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com