Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

Neuroplasticity
Neuroplasticity

மனித உடலில் மூளை ஒரு அற்புதமான படைப்பு. பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. நியூரோ பிளாஸ்டிசிட்டி என்பது வாழ்நாள் முழுவதும் புதிய நரம்பியல் இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் தன்னை மறு சீரமைத்துக் கொள்ளும் மூளையின் திறனை குறிக்கிறது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நியூரோபிளாஸ்டிசிட்டி என்பது ஒரு அற்புதமான அமைப்பாகும். இது நமது மூளையின் தகவமைப்பு மற்றும் ஆற்றலை குறிக்கிறது. புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும் காயங்கள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து மீள்வதற்கும் நமது வாழ்வியல் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கும் உதவுகிறது.

பிளாஸ்டிசிட்டியின் செயல்பாடுகள்:

நியூரோபிளாஸ்டிசிட்டியின் மையத்தில் சினாப்டிக் பிளாஸ்டிசிட்டி உள்ளது. இது மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையிலான இணைப்புகளின் வலிமை அல்லது செயல் திறனில் ஏற்படும் மாற்றங்களை நிர்வகிக்கிறது. நாம் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள நேரும்போது அல்லது ஒரு பணியை திரும்பத் திரும்ப செய்யும் போது அந்த செயலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை வலுவாகவும் திறமையாகவும் மாற்றும் தன்மை உடையது. சினாப்டிக் இணைப்புகளை வலிமைப்படுத்தும் செயல் நீண்ட கால ஆற்றல் (Long term Potentiation) என அழைக்கப்படுகிறது.

நியூரோ ஜெனிசிஸ்:

ஒரு மனிதன் பிறக்கும்போது நிலையான எண்ணிக்கையிலான மூளை செல்களுடன் பிறக்கிறான் என்கிற பழைய நம்பிக்கைக்கு மாற்றாக மூளையின் சில பகுதிகளில் வாழ்நாள் முழுவதும் புதிய நியூரான்களை உருவாக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. இது நியூரோ ஜெனசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மூளையின் ஹிப்போ கேம்பஸ் என்கிற பகுதியில் நிகழ்கிறது. இது கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளையின் முக்கியமான ஒரு பகுதியாகும்.

மறு சீரமைப்பு:

ஒருவரது நடத்தை மற்றும் உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்கள், ஏதாவது காயம் அல்லது அடிபட்டால் மூளையில் உள்ள நரம்பியல் பாதைகளை மறு சீரமைக்க முடியும். இதற்கு கார்டிகல் ரீமேப்பிங் என்று பெயர்.

உதாரணமாக ஒருவருடைய பார்வைத் திறனில் குறைபாடு ஏற்பட்டு பார்வை இழப்பு நேரிட்டால் அவருடைய கேட்கும் திறன் மற்றும் தொட்டு உணரக்கூடிய திறன் போன்றவை நன்றாக செயல்படும். அவற்றின் மூலம் அவர் உணர்ந்த, கேட்ட காட்சி தகவல்களை செயலாக்குவதற்கு நியூரான்கள் உதவுகின்றன. இதற்கு கார்டிகல் ரீமேப்பிங் உதவுகிறது.

சுற்றுச்சூழல் தாக்கம்:

நியூரோபிளாஸ்டிசிட்டி சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் அனுபவங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பல்வேறு தூண்டுதல்கள், சமூகத் தொடர்புகள் மற்றும் கற்றல் வாய்ப்புகள் கொண்ட சூழல்கள் நியூரோபிளாஸ்சிட்டியை ஊக்குவிக்கும். இது மேம்பட்ட அறிவாற்றல் மற்றும் கற்றலுக்கான அதிக திறன் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். அதேசமயம் மன அழுத்தம் தரும் சூழ்நிலைகள் இதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இடையூறு விளைவிக்கும் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கும்.

மூளைக்காயம் மற்றும் மறுவாழ்வு:

பக்கவாதம் அல்லது அதிர்ச்சி போன்ற மூளைக் காயங்களில் இருந்து மீள்வதற்கு நியூரோபிளாஸ்ட் சிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. காயம் பட்ட பகுதிகளில் இருக்கும் நியூரான்கள் அதன் அருகில் இருக்கும் புதிய நியூரான்களிலிருந்து ஆற்றலைப் பெற்றுகின்றன. அவை சேதமடைந்த உயிரணுக்களின் செயல்பாடுகளை சரிப்படுத்துகின்றன. மேலும் காயம் அடைந்த பகுதியை சரி செய்து புதிய இணைப்புகளை உருவாக்கும். அவை மூளையை ஊக்குவித்து அதன் இழந்து போன செயல்பாட்டை மீட்டெடுக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் வெப்பம்… உலகமே அழியப் போகுது… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! 
Neuroplasticity

மூளை ஒரு நிலையான உறுப்பாக இருந்து செயல்படுகிறது என்பதை நியூரோபிளாஸ்டிசிட்டி நிரூபிக்கிறது. இது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மாற்றங்கள் நேர்ந்தால் அவற்றை எதிர்கொண்டு அனுபவங்கள், சவால்கள் மற்றும் சேதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. இந்த குறிப்பிடத்தக்க திறன் வாழ்நாள் முழுவதும் கற்றல், மறுவாழ்வு மற்றும் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தகவல் அமைத்துக் கொள்ள உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com