அதிகரிக்கும் வெப்பம்… உலகமே அழியப் போகுது… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! 

The world is going to Perish
The world is going to Perish

இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி மிகப்பெரிய பேரழிவை சந்திக்கப் போவதாக பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, அச்சமயத்தில் பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சம் இருக்காது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

பிரிஸ்டல் பல்கலைகழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி பேரழிவை சந்திக்கும் என்ற திடிக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதுவும் இந்தப் பேரழிவு வெப்பம் காரணமாக ஏற்படும் என்றும், இதில் மனிதர்கள் உள்பட, எல்லா உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அச்சமயத்தில் இப்போது இருப்பதை விட வெப்பம் இரு மடங்கு அதிகமாக இருக்கும் எனவும், சுமார் 70° டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை மக்கள் உணர்வார்கள் என்றும் எச்சரிக்கின்றனர். 

இவ்வளவு அதிதிவிர வெப்பத்தில், எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது. வெப்பம் காரணமாகவே இந்த பேரழிவு நடக்கும். மனிதர்களின் நடத்தைகளால் பூமியில் அதிகப்படியான கார்பன் வெளியேற்றப்படுவதால், இந்த அழிவு வேகமாக நடக்கும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேநேரம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இதேபோன்ற பேரழிவு நடந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர். 

வெப்பம் உயிரினங்களை என்ன செய்யும்? 

அதிகப்படியான வெப்பம் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு வெப்ப அழுத்தம் மற்றும் நீர் இழப்புக்கு வழிவகுக்கும். அதிக வெப்பநிலையில் உயிரினங்கள் தங்கள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானது. எனவே இதனால் வெப்ப அழுத்தம் ஏற்பட்டு, உடல் உறுப்பு செயலிழப்பு, ஹிட் ஸ்ட்ரோக் மற்றும் பிற ஆபத்தான நிலைமைகள் ஏற்படலாம். அதிகரித்த வெப்பத்தால், நீர் ஆதாரங்கள் குறைந்து, நீரிழப்பு அபாயங்கள் மேலும் அதிகரிக்கும். 

பூமியில் வாழும் பல உயிரினங்கள் சில குறிப்பிட்ட வெப்ப நிலையில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட, எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, சில இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. வெப்பத்தால் சில நோய்களின் பரவல் அதிகரிக்கும். குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, மலேரியா போன்றவை அதிகரிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வெப்ப சலனம் காரணமாக மழை எப்படி வருகிறது தெரியுமா? 
The world is going to Perish

அதிக வெப்பத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு வறட்சிக்கு வழிவகுக்கும். மேலும் மழைப்பொழிவும் பாதிக்கப்படுவதால் பயிர் விளைச்சல் மோசமாகி, மக்களின் உணவுத் தேவைகளில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் பசி, பட்டினி, பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மக்கள் உயிரிழக்கலாம். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பூமி சூடாகி, பின்னர் வறட்சியை ஏற்படுத்தி, இறுதியில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறும். மேலும் அதிக வெப்பத்தால், எரிமலைகள் வெடித்து சிதறும். இச்சமயத்தில் பூமியின் நடுப்பகுதியில் உள்ள லாவாக்கள் பூமியெங்கும் சிதறி ஒரு உயிரினம் கூட இல்லாத நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com