Amazon
AmazonImage Credits: Business Today

அமேசான் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? +2 முடித்திருந்தால் போதும்! 

Published on

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு +2, டிகிரி முடித்த யார் வேண்டுமானாலும் அப்ளை செய்யலாம். 

அமேசான் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான இணைய வர்த்தக நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் இவர்களது கிளை உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது amazon. 

அவர்களது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, தற்போது கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்பு வந்துள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். டிகிரி முடித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Qualification:

  • குறைந்தபட்ச வயது 18  

  • ஆங்கிலத்தில் எழுத, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

  • கம்ப்யூட்டரை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

  • வாரத்தில் எல்லா நாட்களும் காலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை இருக்கும். இரவு நேரப் பணியும் உண்டு.

  • ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாகவும் வேலை செய்ய வேண்டும்.

  • எந்த தொந்தரவும் இல்லாத வேலை செய்யும் இடம் இருக்க வேண்டும். 

  • 20 MB டவுன்லோட் ஸ்பீடு மற்றும் 8 MB அப்லோட் ஸ்பீடு கொண்ட Ethernet இன்டர்நெட் கனெக்ஷன் தேவை. 

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சி செய்வது மனநிலையை சீராக்கும் என்பது உண்மையா?
Amazon

தொடக்கத்தில் உங்களது வேலை சார்ந்த அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்படும். வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பென்ஷன் வசதி, மெடிக்கல் இன்சூரன்ஸ், இன்டர்நெட் அலோவன்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் இதில் உண்டு. இந்த வேலைக்கான சம்பள விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சுமார் 35 ஆயிரத்திற்கு மேல் சம்பளமாக வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அமேசான் ஜாப் போர்ட்டலுக்கு சென்று வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

வீட்டிலிருந்தே பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். உடனடியாக இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

Job Link - Click Here

logo
Kalki Online
kalkionline.com