உடற்பயிற்சி செய்வது மனநிலையை சீராக்கும் என்பது உண்மையா?

Exercise
How Exercise is Helpful for Mental Health?

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன நலத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதால் அது மன ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். 

முதற்கட்டமாக உடற்பயிற்சி என்பது Endorphins எனப்படும் ஹார்மோனை வெளியிடுகிறது. இதை Feel Good ஹார்மோன் எனச் சொல்வார்கள். இந்த ரசாயனமானது மூளையில் உள்ள ரிசப்டர்களுடன் தொடர்பு கொண்டு, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச் சோர்வு போன்ற உணர்வுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே வழக்கமான உடற்பயிற்சி உங்களது மனநிலையை சிறப்பாக மாற்றி மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும். 

மன அழுத்தத்திற்கான இயற்கை தீர்வாக உடற்பயிற்சி செயல்படுகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்களது உடல் உஷ்ணமடைந்து கார்ட்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது. இது உங்களை மிகவும் நிதானமாக்கி மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை மேம்படுத்துகிறது. 

மேலும் நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால், அது உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மனநிலையை காப்பதற்கு உறக்கம் மிகவும் முக்கியமானது. எனவே உடற்பயிற்சி செய்வது மூலமாக உங்களது தூக்க சுழற்சி சிறப்பாக மாறுவதால், நன்றாக தூங்கி மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம். 

உடற்பயிற்சி செய்வது உங்களது சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களுக்கென உடற்பயிற்சி வரம்புகளை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி காணும்போது நீங்களே உங்களை சிறப்பாக நினைப்பீர்கள். அது உங்களுக்கே உங்கள் மீது மரியாதையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். 

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி, எல்லா விஷயங்களிலும் முழு கவனத்துடன் ஈடுபட உடற்பயிற்சி பெரிதளவில் உதவுகிறது. உடற்பயிற்சி மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய மூளை செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது மனத்தெளிவு கவனம் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
Introvert-களின் நம்ப முடியாத ஆற்றல்கள்… நீங்க எப்படி? 
Exercise

வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சூர்யா “உங்க உடம்ப ரெடி பண்ணுங்க, உங்க வலிகள் போயிடும்” எனச் சொல்லுவார். இது வெறும் வார்த்தையாக சொல்லப்பட்டதல்ல, நிதர்சனமான உண்மை. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்றாலே, வாழ்க்கையில் அனைத்துமே மகிழ்ச்சியாகத் தெரிய ஆரம்பிக்கும். எனவே இன்றே உடற்பயிற்சியைத் தொடங்கி ஆரோக்கியமாக இருக்க முற்படுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com