வெகு விரைவில்... ரூ 10 -15 லட்சம் ரேஞ்சில்... புதிய வடிவில்... அசத்த போகும் அம்பாசடர் கார்கள்!

Ambassador Cars
Ambassador Cars
Published on

அன்றைய கால கட்டத்தில் இந்தியாவின் சாலைகளுக்கு ஏற்ற மற்றும் Family Car எனப்பட்ட அம்பாசடர் கார்கள் பற்றி சில தகவல்கள்.

  • ஒரு காலத்தில் நாடு முழுவதும் ஆக்கிரமித்து வீதிகளில் கம்பீரமாக பவனி வந்தன இந்த அம்பாசடர் கார்கள்.

  • அரசாங்கத்தில் முதல் மந்திரிகள் உட்பட , மந்திரிகள், உயர் அதிகாரிகள் எல்லோராலும் பயன்படுத்தப் பட்டது இந்த வகை கார்தான்.

  • நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிது பெரிய வகை கார் என்ற பெருமை உண்டு.

  • இதன் தனிப்பட்ட வடிவமைப்பு அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கு வசதியாக கால்களை நீட்டி உட்கார்ந்து செல்ல வசதியாக இருந்தது.

  • அந்த காலத்தில் கல்கத்தாவின் அருகில் தயாரிக்கப் பட்ட இந்த கார்களின், டாக்சிகள் ஹௌரா ரயில் நிலையம், டம் டம் ஏர்போர்ட்டில் நிரம்பி இருந்தன.

  • முதலில் ஹிந்துஸ்தான் லான்ட்மாஸ்டர் என்ற பெயரில் உருவெடுத்து பிறகு அம்பாசடர் என்ற நாமக்கரணம் பெற்றது.

  • பல வண்ணங்களில் வலம் வந்தாலும் வெள்ளை நிறம் தனி சிறப்பு பெற்றது.

  • அன்றைய சினிமாக்களில் ஹீரோ, ஹீரோயின் வராத சீன்களிலும் உடலை காட்டியது இந்த அம்பாசடர் கார்கள்.

  • ஒவ்வொரு முறையும் புதுபிக்கப்பட்ட அம்பாசடர் கார்கள் 1,2,3,4,5 .. என்று தொடர்ந்து தயாரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு புது பெயருடன் வெளிவந்தன.

  • 1957 முதல் கொடி கட்டி பறந்த இந்த புகழ் பெற்ற கார்கள் வகை பல ஆண்டுக்கள் ஆதிக்கம் செலுத்தி காணமல் போய் விட்டன.

  • அதற்கு பொருளாதாரம் ரீதியான காரணங்களும் உண்டு.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான சிறந்த 5 பாதுகாப்பு செயலிகள்!
Ambassador Cars
  • அவற்றால் மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

  • தொடக்கத்தில் முடி சூடா மன்னன் ஸ்டையிலில் ஆட்சி செய்து வந்த இந்த அம்பாசிடர் கார்கள், நாளடைவில் போட்டிகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருந்தது.

  • அன்றைய பம்பாயில் பியட் கார்கள், மெட்ராஸ்சில் ஸ்டாண்டர்ட் கார்களின் தயாரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது.

  • நாட்டின் பொருளாதார கொள்கை மாற்றங்கள், வங்கிகளில் கார்கள் வாங்க கடன் வசதி போன்றவை பலரும் கார்கள் வாங்க வழி வகுத்தன.

  • போதாகுறைக்கு அடுத்த தலைமுறையினர் தலை தூக்கி சம்பாதிக்க ஆரம்பிக்கவும், கடன்களைப் பெற்று புதிய வகை கார்களை வாங்க ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.

  • அதனுடன் சந்தை போக்கை (Market trend ) கணிக்காமல், தவறான முடிவை எடுத்து வியாபாரத்தை தவற விட்டனர்.

  • உதாரணம்: மாருதி போன்ற நிறுவனங்கள் சிறிய வகை கார்களை தயாரிப்பில் ஈடுபட்டு ரூ 1 லட்சத்திற்கு விற்ற பொழுது, அம்பாசடர் சிறிது பெரிய வகை கார்கள் தயரித்து கண்டசா என்ற பெயரில் சுமார் ரூ 2.50 லட்சம் என்று விற்க முற்பட்டது.

  • சரியான டிமாண்ட் இல்லாததால் சரி வர விற்க முடியாமல் தவித்தனர்.

  • அடுத்து அடுத்து பல வகை கார்கள் பல வகை லேட்டஸ்ட் மாடல்களில் கிடைப்பது அதிகரித்து விட்ட நிலையில், ஒரு காலத்தில் புகழ் பெற்று இருந்த அம்பாசிடர் கார்கள் வீதிகளில் வலம் வருவது குறைந்து போய் விட்டது என்பது நிதர்சனமான உண்மை.

  • ஆனால் ப்ரெஞ்சு கார் தயாரிப்புடன் புது கூட்டு முயற்சியில் 2026 ல் இந்திய சாலைகளில் புது மாடல்களுடன் அம்பாசிடர் கார்கள் வேகம் எடுத்து ஓட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • ரூ 10 - 15 லட்சம் ரேஞ்சில் விற்கப்பட உள்ளன. புதிய திறன் கொண்ட இவைகளில் பல வகை வசதிகளும் இருக்கும். பல வித கார்கள் மத்தியில் போட்டிப் போடப் போகின்றன. அம்பாசிடர் கார்களின் வருகையை சந்திக்க நமது நாட்டின் சாலைகளில் போதிய இடம் இருக்கும் என்று நம்புவோம்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு இந்தியரின் மொபைல் போனில் இருக்க வேண்டிய 5 ஆப்கள்!
Ambassador Cars

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com