நிலவில் அணுஉலை அமைக்கும் அமெரிக்காவின் பலே திட்டம்!

Nuclear reactor in moon
Nuclear reactor in moon
Published on

பூமியில் தான் வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் போக்கு காணப்படுகிறது என்றால், இந்த ஆக்கிரமிப்பு நிலவிலும் தொடர உள்ளது. இதுவரை நிலாவில் அமெரிக்கா மட்டுமே மனிதர்களை அனுப்பி கால் வைத்ததாக நம்பப்படுகிறது. அதற்குப் பின்னர் அரை நூற்றாண்டுகள் கடந்தும் எந்த ஒரு நாடும் நிலாவிற்கு மனிதர்களை இன்று வரை அனுப்பியது இல்லை என்பது வரலாறு.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்றால் சீனா நிலவில் ஒரு அணுமின் நிலையத்தை கட்ட உள்ளதாக தெரிவித்தது. 'இன்னும் சீனாவில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஊரை அழித்துக் கொண்டு இருக்கிறது. அங்கு எல்லாம் அணை கட்டாமல் இவர்கள் நிலாவிற்கு சென்று அணுமின் நிலையம் கட்ட உள்ளார்கள்' என்ற முணுமுணுப்பு இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் சீனாவும், ரஷ்யாவும் எதை செய்தாலும் உடனடியாக அமெரிக்கா அவர்களின் முந்திக்கொண்டு அந்த காரியத்தை செய்து பெயர் தட்ட வேண்டும் என்று நினைப்பது வாடிக்கையான ஒன்று தான்.

அதன்படி, இந்த விஷயத்திலும் அமெரிக்கா முந்திக் கொள்ள ஆரம்பித்தது. சீனா 2035 இல் தான் தன் அணுமின் நிலைய பணிகளை நிலவில் துவக்க உள்ளது. ஆனால், அமெரிக்கா அதற்கு முன்னதாக முந்திக் கொண்டு முடிக்க உள்ளது.

இது பற்றி அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, விண்வெளியில் அணு உலைகளை அமைக்கும் திட்டத்தை பற்றி அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாசா நிர்வாகி சீன் டஃபி 2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் ஒரு அமெரிக்க அணு உலை செயல்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தின் நோக்கமே 2030க்குள் சந்திரனில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான சாத்தியத்தை உண்டாக்குவது தான். நாசாவின் லட்சிய திட்டமான இது எதிர்காலத்தில் மனித குடியேற்றங்களை சந்திரனில் நிறுவுவதற்கான முன்கூட்டிய நடவடிக்கையாக உள்ளது.

சந்திரனின் 100 கிலோ வாட் திறன் கொண்ட அணு உலையை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் கவலை என்னவென்றால், யார் முதலில் நிலாவில் அணு உலை அமைக்கிறார்களோ, அவர்களுக்கே அதிக உரிமை உள்ளதாக அமெரிக்கா நினைக்கிறது. அதனால், ரஷ்யாவும், சீனாவும் இதில் சாதிக்கும் முன்னர் முதலில் அணு உலை அமைக்க அமெரிக்கா துடிக்கிறது.

இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதற்கு ரூ 8,200 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கு கொள்ள 60 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்கள் நாசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலைகளை அமைக்கக் கூடிய நிறுவனங்களை நாசா தேடி வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அணு மின் நிலைய கட்டுமானம், ஆற்றல், விநியோகம் மற்றும் செயல்பாடு ஆகியவை பெரும் செலவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த திட்டம் ஆர்ட்டெமிஸ் மிஷனின் ஒரு பகுதியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
மழை உங்களுக்கு பிடிக்குமா? அப்போ 'Petrichor' பற்றி தெரிஞ்சுக்கோங்க!
Nuclear reactor in moon

இதற்கான தொடக்கம் தற்போது முடிவெடுக்கப்பட்டது அல்ல. நாசாவும் எரிசக்தித் துறையும் பல ஆண்டுகளாக விண்வெளி மற்றும் வேற்றுகிரக தேவைக்காக சிறிய அணுசக்தி அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

1960களில் இருந்தே விண்வெளியில் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் முனைந்துள்ளன. செயற்கைக் கோள்கள், ரோவர்கள் மற்றும் வாயேஜர் ஆகியவற்றிற்கு சக்தி அளிக்க, சிறிய அளவிலான அணு எரிபொருளை பயன்படுத்தும் ரேடியோ ஐசோடோப் ஜெனரேட்டர்களை தான் பயன்படுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
நோபல் பரிசு வென்ற ஐன்ஸ்டீன்! - ஆனா இந்த 'ஒண்ணு'ல பாஸாகவே இல்ல!
Nuclear reactor in moon

1992 ஆம் ஆண்டு ஐ.நா சபை விண்வெளியில் அணுசக்தியை பயன்படுத்த கொள்கைகளை வகுத்துள்ளது. விண்வெளியில் சூரிய சக்தி போதுமான அளவில் கிடைக்கா விட்டால், அணுசக்தியை பயன்படுத்துவதை அங்கீகரித்துள்ளது. சர்வதேச விதிமுறையில் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கு தடை இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com