உங்கள் அழைப்புகள் கண்காணிக்கப்படுகிறதா?... ஜாக்கிரதை!

Calls
CallsCalls
Published on

தற்கால உலகில் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய கருவியாக தொலைபேசி உரையாடல்கள் விளங்குகின்றன. இதனால், நொடிப்பொழுதில் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் நாம் எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. இந்த வசதி ஒருபுறம் இருக்க, மறுபுறம் நமது அந்தரங்க உரையாடல்கள் கண்காணிக்கப்படலாம் என்ற அச்சமும் இருந்து கொண்டே இருக்கிறது. 

நாம் அறியாமலேயே நமது தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்கள் நமக்கு எதிராக பயன்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நாம் பேசும் நபர்கள் நமது உரையாடல்களைப் பதிவு செய்கிறார்களா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

சில நவீன தொலைபேசிகளில், உரையாடல் பதிவு செய்யப்படும்போது ஒருவித எச்சரிக்கை ஒலி அல்லது அறிவிப்பு வெளியாகும். "உங்கள் குரல் இப்போது பதிவு செய்யப்படுகிறது" போன்ற அறிவிப்புகள் மூலம் எதிர்முனையில் இருப்பவர் உரையாடலைப் பதிவு செய்கிறார் என்பதை நாம் உணரலாம். இந்த அறிவிப்பு வரும்போது, ஏன் பதிவு செய்கிறார்கள் என்று நாம் அவர்களிடம் கேட்கலாம் அல்லது தேவையற்ற தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கலாம். ஆனால், எல்லா தொலைபேசிகளிலும் இந்த வசதி இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு இல்லாத சமயங்களில், உரையாடல் பதிவு செய்யப்படுகிறதா என்பதை வேறு சில அறிகுறிகள் மூலம் நாம் உணர முடியும். உதாரணமாக, அழைப்பை ஏற்றவுடன் அல்லது நாம் அழைப்பை மேற்கொண்டவுடன் ஒரு சிறிய "பீப்" ஒலி கேட்டால், அது உரையாடல் பதிவு செய்யப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த ஒலி சில விநாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான ஒலிகள் கேட்கும்போது, நாம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
சைபர் மோசடிகளைத் தடுக்க வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்!
Calls

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நமது தனிப்பட்ட தகவல்களையும் உரையாடல்களையும் பாதுகாப்பது மிகவும் முக்கியம். நாம் யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருப்பதுடன், உரையாடல் பதிவு செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விழிப்புடன் செயல்படுவது நமது பாதுகாப்பிற்கு உதவும். நமது அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதையும் படியுங்கள்:
அப்பளம்! பப்படம்! பப்பட்! வித்தியாசம் என்ன தெரியுமா? 
Calls

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com