செய்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு.. களமிறங்கும் ஆப்பிள்!

Artificial intelligence in the news industry.
Artificial intelligence in the news industry.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்திக் கட்டுரைகளை எழுதுவதற்காக, செய்தி நிறுவனங்களுடன் கைகோர்க்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

சமீபத்தில் என்பிசி, ஐஏசி போன்ற தலைசிறந்த செய்தி மற்றும் வெளியீட்டு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. செய்தித் துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் முயற்சியில் நீண்ட காலமாகவே ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக மேற்கண்ட நிறுவனங்களின் செய்திக் கட்டுரைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி கோரி, செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆப்பிள். 

இதுகுறித்து வெளியான செய்தியின் படி, செய்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க குறைந்தது 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் பற்றி அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனம் அவர்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ளது. 

இதுவரை ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வது பற்றி அந்த அளவுக்கு வெளியே தெரியப்படுத்தவில்லை. ஆனால் கூகுள், மெட்டா, ஓபன்ஏஐ, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் அவர்களின் பல்வேறு விதமான டூள்கள் மற்றும் சாட்பாட்களை தயாரித்து மக்களுடைய பயன்பாட்டிற்கும் வெளியிட்டு விட்டார்கள். என் மூலமாக அந்நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டுகின்றனர். 

இதையும் படியுங்கள்:
செயற்கை நுண்ணறிவால் எழுத்தாளர்களுக்கு சிக்கல்!
Artificial intelligence in the news industry.

ஆனால் தற்போது இவர்களுக்கு போட்டியாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனம் கலமரங்கி இருப்பது, டெக் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதே நேரம் அவர்கள் செய்தித் துறையை டார்கெட் செய்துள்ளதால், கூகுளுக்கு பெரும் போட்டியாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com