ATM - Rice
ATM - Rice

ATM: இனி பணம் மட்டுமல்ல; அரிசி கூட தாங்க!

Published on

தொழிநுட்ப வளர்ச்சியை கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்த அறிவியல் உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிறைந்து வருகின்றன. நல்லதம்பி படத்தில் N. S. கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் வரியில்,

"நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு

அல்லும், பகலும் ஆக்கி அடுக்க அதுக்கொரு மிஷினு

கொல்ல புரத்தில குழாய் வைக்கணும்

குளிரு மிஷினும் கூட வைக்கணும்

பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம 

படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே

இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்......"

இந்த பாடல் பழமை என்று சொன்ன காலங்கள் மாறி, இந்த பாடலில் சொல்லப்பட்ட மிஷின்ஸ் எல்லாம் பழமை ஆகிடுச்சுல? இளைய தலைமுறையினரை விடுத்து பெரியவர்களிடம், இந்த உலகில் புதிய மாறுதல்களை கற்றுக் கொள்ள எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் அடுக்கடுக்காக கூறுவார்கள். ஏனெனில், அவர்கள்தான் அந்த காலத்தையும், இந்த காலத்தையும் பார்த்தவர்கள்.

இதையும் படியுங்கள்:
இரயில் விபத்துகளைத் தடுக்கும் கவச் தொழில்நுட்பம் பற்றி தெரியுமா?
ATM - Rice

எடுத்துக்காட்டாக,

ATM இயந்திரம் 1967ஆம் ஆண்டு முதல்தான் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது. ஏ.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் ஆவார். இந்த இயந்திரம் கண்டுபிடிப்புக்கு பின்பு, அதிகமாக புழக்கத்தில் இருப்பது இந்த நூற்றாண்டில்தான்.

முன்பெல்லாம் சுருக்கு பைதான் ATM ஆக இருந்தது. தற்போது googlepay, phonepay சுருக்கு பைகளாக இருக்கின்றன. தேவைப்படும் போது மட்டும் ATM யை உபயோகித்துக் கொள்வர். இல்லையெனில், நேரடியாக பணப்பரிவர்தனை செய்துவிடுவர்.

இதுவரை இவ்வாறு பயன்படுத்தி வந்த ATM மிஷினை, இனி நாம் அரிசிக்காகவும் பயன்படுத்த உள்ளோம் என்று தெரியுமா? தெளிவாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் உள்ள ஒடிசாவில் நியாயவிலைக் கடை ஒன்றில், முதல் அரிசி ATM மிஷின் தயாரிக்கப்பட்டு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதை ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, திறந்து வைத்துள்ளார்.

நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் ஒடிசாவில் இன்னும் 30 மாவட்டங்களில் இந்த அரிசி ATM தொடங்கப்பட உள்ளது. இந்த ATM-ல் நியாயவிலைக் கடைகளில் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டை வைத்து, 25 கிலோ அரிசி வரை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் நியாயவிலைக் கடைகளில் காத்திருக்க வேண்டியத்தில்லை. இந்த புதிய தொடக்கம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com