விமான போக்குவரத்தின் விரைவான வளர்ச்சி: ஒரு முழு பார்வை!

aviation industry growth
aviation industry growth
Published on

விமான போக்குவரத்தின் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, வர்த்தக மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பல நன்மைகளுக்கு வழி வகுக்கிறது. இந்தத் துறை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும் (aviation industry growth). இந்தியா போன்ற நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. விமான போக்குவரத்து வளர்ச்சி என்பது பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பும், புதிய விமான நிலையங்கள் உருவாக்கமும் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலமும் குறிப்பிடப்படுகிறது. இது மக்களை, கலாச்சாரங்களை மற்றும் வளங்களை இணைக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

1) பொருளாதார வளர்ச்சி:

விமானப் போக்குவரத்து உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பை எளிதாக்குகிறது. இவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பை வழங்குகிறது.

2) வர்த்தக மற்றும் சுற்றுலா:

விமான போக்குவரத்து வளர்ச்சி வர்த்தகத்தை வளர்க்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. உலகளாவிய வர்த்தகத்தை எளிதாக்குவதுடன், முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. சுற்றுலாப் பயணிகள் எளிதாக பயணிக்க உதவுவதால், சுற்றுலாத் துறையில் வருமானம் அதிகரிக்கிறது. இது ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உள்ளூர் வணிகங்களின் வருவாயை அதிகரிக்கிறது. வணிகப் பயணங்களை எளிதாக்குவதன் மூலம் வர்த்தக உறவுகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கிறது.

3) வேலைவாய்ப்பு:

விமானப் போக்குவரத்துத் துறை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்குகின்றது. விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன.

4) அரசு ஆதரவு:

பல நாடுகள் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் மூலம் ஆதரவளிக்கின்றன. அரசாங்கங்கள்,UDAN போன்ற திட்டங்கள் மூலம், மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதன் மூலம் விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கின்றது. அத்துடன் உலக வங்கி விமானப் போக்குவரத்து தொடர்பான திட்டங்களுக்கு நிதி உதவியையும் அளிக்கிறது.

5) உள்கட்டமைப்பு மேம்பாடு:

விமான நிலையங்களின் வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் பசுமை விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விமான நிலையங்கள், சாலைகள், பொது போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற மேம்பட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் தூண்டுகின்றன.

6) இந்தியாவில் வளர்ச்சி:

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக உள்ளது. மேலும் வேகமாக வளர்ந்து வரும் முதன்மை சந்தைகளில் ஒன்றாகும். இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் ஊதிய உயர்வு போன்ற பொருளாதார நன்மைகளும் ஏற்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
விமானப் பயணங்கள் - சில சுவாரஸ்யமான உண்மைகள்!
aviation industry growth

7) எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சவால்கள்:

விரைவான வளர்ச்சி மற்றும் அதிக பயணிகளின் தேவை, உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக நாட்டை நிலைநிறுத்த உதவுகின்றது. ஆனால் அதே நேரத்தில் விமான போக்குவரத்தின் விரைவான வளர்ச்சியானது கார்பன் உமிழ்வு மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற சவால்களையும் ஏற்படுத்துகிறது. அவற்றை குறைப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், செயல்படுத்துவதும் முக்கிய சவால்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com