Bad Google's quality.
Bad Google's quality.

மோசமாகும் கூகுளின் தரம்.. அதிருப்தியில் பயனர்கள்!

Published on

தவறான உள்ளடக்கம், அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் ஸ்பாம் பதிவுகள் ஆகியவற்றால் கூகுளின் தரம் குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு அமைப்புகள் இணைந்து கூகுளின் தரம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் கூகுளில் உள்ள Content-களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குறைந்த உள்ளடக்கம், அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் பதிவுகளால் கூகுளின் உள்ளடக்கங்களின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 

குறிப்பாக பொருட்களை பிறருக்கு சந்தைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் Affiliate marketing காரணமாக உள்ளடக்கங்களின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குறைந்த தரம் கொண்ட உள்ளடக்கங்களில் குறிப்பிட நிறுவனத்தின் பொருட்களை பயனர்களை வாங்கச்செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து எழுதப்படுகிறது. இதனால் பயனர்கள் அவர்கள் தேடியது கிடைக்காமல், கொஞ்சமும் தொடர்பில்லாத தகவல்கள் தேவை இல்லாமல் அவர்களிடம் திணிக்கப்படுகிறது. 

பயனர்கள் தேடும் விஷயங்களைப் பற்றி ஏதோ ஒரு சில லிங்குகளில் மட்டுமே அவர்களுக்கான முழு தகவல் கிடைப்பதாக டெக் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் அவர்கள் பார்க்கும் பெரும்பாலான பதிவுகள் ஸ்பேம் பதிவுகளாகவும், Affiliate மார்க்கெட்டிங் பதிவுகளாகவும் இருப்பதால், பயனர்கள் விரக்தி அடைகின்றனர். பயனர்கள் எதையாவது தேடினாலே சந்தைப்படுத்தும் Content-கள் முன்னே வந்து காட்டுவதுபோல SEO செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு உண்மையிலேயே தேவையான தகவல்கள் கிடைக்காமல் போகிறது.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா? 
Bad Google's quality.

மேலும் இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இந்த பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் உள்ளடக்கங்களின் தரத்தை உயர்த்துவதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com