பஜாஜ் பல்சரின் 400 சிசி புதிய பைக் அறிமுகம்: இனிமே செம ஸ்பீடு தான்!

Pulsar NS 400
Pulsar NS 400

இருசக்கர வாகனங்கள் அறிமுகமானதில் இருந்து, அதன் மீதான மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதற்கேற்ப இருசக்கர வாகன நிறுவனங்களும் அவ்வப்போது புதுப்புது மாடல்களில் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வகையில், பிரபல இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ், பல்சர் என்எஸ் 400 என்ற புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இளைஞர்கள் அனைவரும் விரும்பக் கூடிய ஒரு பைக்தான் என்றால் அது பல்சர் பைக் என்று அடித்துச் சொல்லலாம். பல்சர் பைக்குகளில் வேகத்தின் அடிப்படையில் 125சிசி, 150சிசி, 180சிசி, 200சிசி மற்றும் 220சிசி என பல்வேறு மாடல்கள் பல வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அவ்வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் என்எஸ் 200 மற்றும் பல்சர் 220எஃப் ஆகிய இரு மாடல்கள் வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று, அதிகளவில் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து தற்போது பல்சர் என்எஸ் 400 பைக் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது. இதன் வெளியீடு பைக் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

பல்சர் என்எஸ் 400:

பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்திய இருசக்கர வாகனங்களிலேயே பல்சர் என்எஸ் 400 பைக் தான் அதிக வேகத்திறன் கொண்டது. 373சிசி வேகத் திறன் ஆற்றல் கொண்ட இந்த புதிய பைக் 6 கியர்களுடன், 35 என்எம் டார்க் திறன் மற்றும் 40 பிஎஸ் ஆற்றலைக் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த பைக் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் பழுப்பு என நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

பைக் வடிவமைப்பில் முன்பக்க விளக்கு மற்றும் டயர்கள் புதுமையான வடிவில் மாற்றப்பட்டுள்ளன. வாகனத்தின் மேற்புறத்தில் வேகமானிக்கு அருகில் எண்ம திரை பொருத்தப்பட்டுள்ளது. இதில் நம்முடைய ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் ப்ளூடூத் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பல்சர் என்எஸ் 400 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,85,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சில்லரை விற்பனை மையங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்தது! ஆச்சரியத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்!
Pulsar NS 400

இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் வகையில் மற்ற பல்சர் பைக்குகளை விடவும் ஸ்டைலிஷ் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது பல்சர் என்எஸ் 400. இந்த பைக்கின் உற்பத்தி புனே நகரில் உள்ள தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது. முன்னதாக இதன் அறிமுகம் கடந்த மார்ச் மாதம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்காத காரணத்தால் இதன் வெளியீடு தள்ளிப் போனது. பிறகு, அடுத்த ஆண்டு தான் பல்சர் என்எஸ் 400 பைக் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த பைக் அறிமுகமாகி இருப்பது, பைக் பிரியர்களுக்கு ஆச்சர்யத்துடன் கூடிய உற்சாகத்தை அளித்துள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த புதிய பல்சர் பைக்கின் வருகையால், மற்ற பல்சர் பைக்குகளில் விலை குறையுமா என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், இதுகுறித்த அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகவில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com