10,000 ரூபாய்க்குள்ளே பிரீமியம் அனுபவம்! இந்த 5 போன்களைத் தவறவிடாதீர்கள்!

பட்ஜெட் விலையில் அதிரடி வசதிகள்: உங்கள் அடுத்த ஸ்மார்ட்போன் இதோ இந்தப் பட்டியலில்!
Best phones under 10000
Best phones under 10000AI Image
Updated on

2026 Best phones under 10000: இப்போதெல்லாம் சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு போன்கள் விற்கப்பட்டாலும், நடுத்தர மக்களின் முதல் தேர்வு எப்போதுமே பட்ஜெட் போன்கள்தான். ஒரு காலத்தில் 10,000 ரூபாய்க்கு போன் வாங்கினால் அதில் பெரிய வசதிகள் ஏதும் இருக்காது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதிக பேட்டரி, பெரிய திரை மற்றும் தெளிவான கேமரா என பல பிரீமியம் வசதிகள் மிக குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன. 

Best phones under 10000
Best phones under 10000AI Image

முதல் முறையாக போன் வாங்குபவர்களுக்கும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பரிசளிக்க நினைப்பவர்களுக்கும் இது மிகச்சிறந்த தேர்வாக அமையும். இந்திய சந்தையில் வெறும் 10,000 ரூபாய்க்குள் கிடைக்கும் 5 சூப்பரான ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. Samsung Galaxy M07

பட்ஜெட் விலையில் சாம்சங் பிரியர்களுக்கு இந்த போன் ஒரு அருமையான தேர்வாகும். MediaTek Helio G99 ப்ராசஸர் கொண்டு இயங்கும் இந்த போனில் 6.7 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் இதில் உள்ளது. அருமையான புகைப்படங்கள் எடுக்க 50Mp பின்பக்க கேமரா மற்றும் 8Mp முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரி கொண்ட இந்த மாடல் ஆன்லைனில் 9,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் பாக்ஸில் சார்ஜர் வராது என்பதை நினைவில் கொள்ளவும்.

2. POCO C71

பெரிய டிஸ்பிளே மற்றும் அதிக நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மாடல் மிகவும் பிடிக்கும். 6.88 இன்ச் பிரம்மாண்ட டிஸ்பிளே மற்றும் 5200 mAh பேட்டரி கொண்ட இந்த போன் தொடர்ந்து 15 மணிநேர பேக்கப் வழங்கும் என நிறுவனம் உறுதியாக கூறுகிறது. 32Mp பின்பக்க கேமரா மற்றும் 8Mp செல்ஃபி கேமரா இதில் உள்ளது. Unisoc T7250 சிப்செட் மூலம் இயங்கும் இந்த மாடல் வெறும் 8,985 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் ஸ்டோரேஜை 2டிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

3. Lava Bold N2

நமது பாக்கெட்டிற்கு ஏற்ற ஒரு அசத்தலான மாடல்தான் லாவா போல்ட் என்2 (Lava Bold N2). ஆக்டா கோர் ப்ராசஸரில் மிக சீராக இயங்கும் இதில் 6.75 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே உள்ளது. 13Mp பின்பக்க கேமரா மற்றும் 5Mp முன்பக்க கேமரா இதில் வழங்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரி இருப்பதால் நாள் முழுவதும் சார்ஜ் தாராளமாக நிற்கும். இதன் சிறப்பு என்னவென்றால் போனுடன் கேஸ் மற்றும் சிம் எஜெக்டர் பின் ஆகியவை இலவசமாகவே கிடைக்கிறது. இதன் விலை வெறும் 8,899 ரூபாய் மட்டுமே.

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் ஜி.டி. நாயுடு கார் சேகரிப்பு!
Best phones under 10000

4. Samsung Galaxy F07

சாம்சங் வரிசையில் மற்றொரு அசத்தலான மாடல் சாம்சங் கேலக்ஸி எஃப்07 (Samsung Galaxy F07). MediaTek Helio G99 சிப்செட், 6.7 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 4ஜிபி ரேம் உடன் இந்த போன் வலுவாக களமிறங்கியுள்ளது. வெறும் 184 கிராம் எடை கொண்ட இந்த போனில் 50Mp டூயல் பின்பக்க கேமரா மற்றும் 8Mp செல்ஃபி கேமரா உள்ளது. 5000 mAh பேட்டரியுடன் வரும் இந்த மாடலின் விலையும் 9,999 ரூபாய் ஆகும்.

5. Redmi A5

ஸ்டைலான லுக்கில் ஒரு நேர்த்தியான பட்ஜெட் போன் வேண்டும் என்பவர்களுக்கு ரெட்மி ஏ5 (Redmi A5) சிறந்த தேர்வாக அமையும். ஆக்டா கோர் ப்ராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் இதில் உள்ளது. 6.88 இன்ச் பெரிய டிஸ்பிளே மற்றும் 32Mp ஏஐ டூயல் கேமரா இதில் சிறப்பாக செயல்படுகிறது. 5200 mAh பேட்டரி கொண்ட இந்த போனின் எடை 193 கிராம் ஆகும். அழகிய மூன்று நிறங்களில் வரும் இதன் விலை 8,999 ரூபாய் ஆகும்.

இதையும் படியுங்கள்:
அரசாங்கமே அங்கீகரித்த ஆண்டெனா மனிதன்... இந்த ரகசியம் பலருக்கும் தெரியாது!
Best phones under 10000

ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற நிலை இப்போது முழுமையாக மாறிவிட்டது.  குறைந்த விலையில் இவ்வளவு அட்டகாசமான அம்சங்கள் கிடைப்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சிதான். உங்களின் தேவை மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற சரியான பிராண்டை தேர்ந்தெடுத்து உங்களின் பணத்தை புத்திசாலித்தனமாக மிச்சப்படுத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com