வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் தேனீக்கள்… எப்படி சாத்தியம்? 

 bee
Bomb-finding bees… how is that possible?
Published on

தேனீக்கள் என்பவை இயற்கையின் அற்புதமான படைப்புகள் ஆகும். தங்களது வாழ்நாள் முழுவதும் மகரந்தம் சேகரித்து, தேன் உற்பத்தி செய்து, கூடு கட்டுவதில் தீவிரமாக ஈடுபடும் இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களுக்கு பல வழிகளில் உதவுகின்றன.‌ தேனீக்களின் இந்தத் திறமைகளைப் பயன்படுத்தி மனிதர்கள் பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். அவற்றுள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் தேனீக்களைப் பயன்படுத்தி வெடிகுண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம். 

தேனீக்கள்: தேனீக்கள் சமூக உயிரினங்களாகும். அவை ஒரு குடும்பமாக வாழும். ஒரு குடும்பத்தில் ராணித் தேனீ, ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்கார தேனீக்கள் என மூன்று வகை தேனீக்கள் இருக்கும். ஒவ்வொரு தேனீக்கும் தனித்தனி பணிகள் உண்டு. ராணித் தேனீ முட்டையிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தும். ஆண் தேனீக்கள் ராணித் தேனீயுடன் இணைந்து புதிய தேனீக்களை உருவாக்குவதில் ஈடுபடும். வேலைக்கார தேனீக்கள் தான் கூட்டின் அனைத்து வேலைகளையும் செய்கின்றன.

அவை மகரந்தம் சேகரித்தல், தேன் உற்பத்தி செய்தல், கூடு கட்டுதல், முட்டைகளைப் பராமரித்தல் போன்ற எல்லா பணிகளையும் செய்கின்றன. தேனீக்கள் மிகவும் நுண்ணிய வாசனைகளை உணரக்கூடிய திறன் கொண்டவை. இதன் காரணமாகவே இவற்றைப் பயன்படுத்தி வெடிகுண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். 

இந்தத் தொழில்நுட்பத்தில் தேனீக்களுக்கு வெடிபொருட்களின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர், இந்தத் தேனீக்கள் வெடிபொருட்கள் இருக்கக்கூடிய இடங்களில் விடப்படுகின்றன. வெடிபொருட்களின் வாசனையை உணர்ந்த தேனீக்கள் அந்த இடத்திற்கு வந்து மொத்தமாக தங்கிவிடும். இந்த நடவடிக்கையை கண்டுபிடிப்பதன் மூலம் வெடிபொருட்கள் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். 

தேனீக்கள் மிகவும் நுண்ணிய வாசனையை உணரக்கூடியவை என்பதால் இந்த தொழில்நுட்பம் மிகவும் துல்லியமாக செயல்படும். தேனீக்களால் வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தை சென்றடைந்து, அவை இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டிக் கொடுக்க முடியும். 

இந்தத் தொழில்நுட்பத்தில் மனிதர்கள் நேரடியாக வெடிபொருட்களைத் தொட வேண்டிய அவசியமில்லை என்பதால், மனிதர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது. மேலும், இந்த தொழில்நுட்பத்தில் தேனீக்களை பயன்படுத்துவதில் செலவு மிகவும் குறைவு. இருப்பினும், மழை, காற்று போன்ற வானிலை மாற்றங்கள் தேனீக்களின் செயல்பாட்டை பாதிக்கலாம். பிற பூச்சிகள் தேனீக்களை தாக்கி அவற்றின் பணியை முறியடிக்கும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் தேனீ! எப்படி தெரியுமா?
 bee

தொடக்க நிலையில் தேனீக்களுக்கு வெடிபொருட்களின் வாசனையை பயிற்சி அளிப்பது முற்றிலும் சவாலானது. இதற்காக, முதலில் வெடிபொருளின் வாசனையை நுகரச்செய்து, உடனடியாக அதற்கு சர்க்கரை தண்ணீர் உணவாக அளிக்கப்படுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக செய்யும்போது, வெடிபொருளின் வாசனை வந்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்பதை உணரும் தேனீக்கள், வெடிபொருள் வாசனை இருக்கும் இடத்தில் சென்று அமர்கின்றன. 

அல்லது, அதற்காகவே பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் தேனீக்களை வைத்து, வெடி மருந்தின் அருகே கொண்டு செல்லும்போது, வித்தியாசமாக செயல்படுவது கண்காணிக்கப்பட்டு, வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com