நோயிலிருந்து நம்மை காப்பாற்றும் நமது மூளை! புதிய ஆய்வு; சுவாரஸ்ய தகவல்கள்

இந்த ஆய்வு, நமது மூளை எப்படி எதிர்கால ஆபத்துகளுக்கு முன்னதாகவே தயாராகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
Brain
Brain
Published on
நமது மூளை எப்படி நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகிறது என்பது பற்றி ஒரு புதிய ஆய்வு சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து லாசான்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் அண்ட்ரியா செரினோ தலைமையிலான குழு இதை ஆராய்ந்துள்ளது.

இவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், நோய் பாதித்த ஒருவரை நாம் பார்க்கும்போதே நமது மூளை நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி, உடலை தயார் செய்கிறது. இது எப்படி சாத்தியம்? வாங்க பார்க்கலாம்....

உடல் நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்கும்போது நமது மூளை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு புதிய ஆய்வு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

The brain fires up
brainCredit: Zephyr/Science Photo Library

இந்த ஆய்வு, நோய்த் தொற்று ஏற்படலாம் என்று எதிர்பார்க்கும்போதே மூளை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது என்று காட்டுகிறது.

இது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள சுவிட்சர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான அந்திரியா செரினோ மற்றும் அவரது குழு, மூளை ஸ்கேன்கள், ரத்த பரிசோதனைகள் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளனர்.

Girl wearing VR set
virtual realitySven Hoppe/dpa

இந்த ஆய்வில், ஆரோக்கியமான தன்னார்வலர்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு சிறப்பு கண்ணாடி (Google Oculus Rift VR headset) அணிவிக்கப்பட்டது. இந்த கண்ணாடியின் மூலம், அவர்கள் ஒரு மனித உருவத்தைப் (virtual avatar) பார்க்க முடிந்தது. இங்கு "virtual avatar" என்றால், உண்மையான மனிதர்கள் இல்லாமல், கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு புனை உருவம் என்று புரிந்து கொள்ளுங்கள். 

இந்த ஆய்வில், நோய் அறிகுறிகள் காட்டும் உருவங்கள் தன்னார்வலர்களை நெருங்கியபோது, அவர்களது மூளையின் சில பகுதிகள் செயல்படத் தொடங்கின. இந்தப் பகுதிகள், நமது உடலைச் சுற்றியுள்ள இடத்தைக் கவனிக்க உதவுகின்றன.

குறிப்பாக நமக்கு அருகில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை உணர்கின்றன. பின்னர், மூளையின் 'salience network' என்ற பகுதி செயல்படுகிறது.

இது முக்கியமான நிகழ்வுகள், குறிப்பாக ஆபத்துகளை அடையாளம் கண்டு, அதற்கு பதிலளிக்க உதவுகிறது. இந்த செயல்பாடு, உடலின் முதல் காவலர்களான 'innate lymphoid cells' என்ற நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுகிறது. 

இந்த செல்கள், நோய்க் கிருமிகளை எதிர்கொள்ள முதல் பாதுகாப்பு அணியாக செயல்படுகின்றன. நோய் அறிகுறிகள் காட்டும் உருவங்களைப் பார்த்தவர்களிடம் இந்த செல்களின் எண்ணிக்கை, ஆரோக்கியமான உருவங்களைப் பார்த்தவர்களை விட அதிகமாக இருந்தது.

இது தடுப்பூசி பெற்றவர்களிடம் காணப்பட்ட நோய் எதிர்ப்பு செயல்பாட்டுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.

இந்தக் கண்டுபிடிப்பு, மூளையும் நோய் எதிர்ப்பு அமைப்பும் எப்படி ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

"இந்த VR தொழில்நுட்பம் மிகவும் சுவாரஸ்யமானது," என்று ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் நோய் எதிர்ப்பு நிபுணர் ஐசாக் சியு கூறினார்.

இது உடலின் இரண்டு சிக்கலான அமைப்புகள் ஒன்றிணைந்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க உதவுவதை காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த கண்டுபிடிப்பு தடுப்பூசிகளை மேம்படுத்த உதவலாம் என்று நம்புகின்றனர்.

VR-ஐ பயன்படுத்தி, தடுப்பூசிகள் மூலம் இலக்கு வைக்கப்படும் நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்க முடியும். இது தடுப்பூசியின் பலத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவும்.

இந்த ஆய்வு, நமது மூளை எப்படி எதிர்கால ஆபத்துகளுக்கு முன்னதாகவே தயாராகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
மூளை மேஜிக்! ஒளிப்பட நினைவாற்றல் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
Brain

நோய் தொற்று நடக்காமலேயே உடல் தயாராகி, நம்மை பாதுகாக்கிறது. இது நமது உடலின் அற்புதமான திறன்களை உணர்த்துகிறது, மேலும் இதை மருத்துவத்தில் பயன்படுத்தி நம்மை நோய்களிலிருந்து காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com