வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

Bryan Johnson
Bryan Johnson
Published on

அமெரிக்காவின் பில்லியனர், தொழிலதிபர் பிரையன் ஜான்சன் (Bryan Johnson) தனது ஆயுளை நீட்டிக்க பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருவது உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மென்பொருள் நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை குவித்த இவர், தனது ஆரோக்கியத்திற்காக ஆண்டுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறார்.

கடந்த ஆண்டு, 72 வயதான தனது தந்தை ரிச்சர்டின் வயதாகும் வேகத்தை குறைக்க, தன்னுடைய பிளாஸ்மாவை தந்தையின் உடலில் செலுத்தும் சிகிச்சையை மேற்கொண்டார். இந்த 'பயோ-ஹேக்' எனப்படும் சிகிச்சை, தந்தையின் வயதான வேகத்தை 25 ஆண்டுகள் குறைத்ததாக பிரையன் கூறினார். இதற்காக தந்தை ரிச்சர்ட் தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க வேண்டும், முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் கடுமையான உடற்பயிற்சி அட்டவணையை பின்பற்ற வேண்டியிருந்தது.

இந்த சிகிச்சையின் வெற்றி குறித்து பிரையன் மிகவும் உற்சாகமாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகள் குறித்து நிபுணர்கள் சந்தேகம் எழுப்பினர். இந்த சிகிச்சை முறை மிகவும் விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், அதன் பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது, பிரையன் ஜான்சன் தனது சொந்த உடலில் மற்றொரு சோதனையை மேற்கொண்டுள்ளார். அவர் தனது ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்து, அதற்கு பதிலாக “அல்புமின்” என்ற புரதத்தை தன் உடலில் செலுத்தியுள்ளார். இந்த சிகிச்சையின் மூலம் தனது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றி, தோல் மற்றும் உறுப்புகளின் வயதாவதைத் தடுக்க முடியும் என நம்புகிறார்.

இதையும் படியுங்கள்:
ஒரு மனிதன் அதிகமாக பேசினால் அல்லது பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்?
Bryan Johnson

பிரையன் ஜான்சனின் இந்த சோதனைகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம், ஆயுளை நீட்டிக்க மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், அவை பொதுமக்களுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. மேலும், இந்த சிகிச்சைகளின் நீண்டகால விளைவுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், அவற்றை பாதுகாப்பானவை என்று கூற முடியாது.

பிரையன் ஜான்சனின் இந்த சோதனைகள், ஆயுள் நீட்டிப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்புகின்றன. மனிதன் தனது ஆயுளை செயற்கையாக நீட்டிக்க முடியுமா? இந்த முயற்சிகள் நம்மை எங்கே கொண்டு செல்லும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண, இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com