ஒரு மனிதன் அதிகமாக பேசினால் அல்லது பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்?

Speaking
Speaking
Published on

மக்கள் தொடர்பு என்பது நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் இன்றியமையாத அம்சமாகும். ஒரு நபர் பேசும் அளவு சூழ்நிலைகளின் அடிப்படையில் மாறுபடும். ஆனால், பேசுவதற்கான உகந்த வரம்பைப் புரிந்துகொள்வது குரல் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்க உதவும். அதிலும் இன்னொரு புறம் இதற்கு எதிர்மறையாக பேசாமல் இருப்பதனால் என்னென்ன நடக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பேசுவதற்கான அதிகபட்ச வரம்பு:

சராசரியாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு 10,000 முதல் 20,000 வார்த்தைகள் வரை பேச முடியும். இந்த வரம்பு, ஒருவரின் தொழில், சமூக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களால் மாறுபடலாம். உதாரணமாக, ஆசிரியர்கள், பொதுப் பேச்சாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகள் போன்றவர்கள் தங்கள் தொழில்களின் இயல்பின் காரணமாக சில நேரங்களில், மேல குறிப்பிட்ட அளவையும் மீறி பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

பேச வேண்டிய குறைந்தபட்ச வரம்பு:

மாறாக, ஒரு நபர் தினமும் பேச வேண்டிய குறைந்தபட்ச வார்த்தைகள் என்று எந்தொரு அளவும் இல்லை. இருப்பினும், வழக்கமான உரையாடலில் ஈடுபடுவது மன மற்றும் உணர்ச்சிகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஒரு நாளைக்கு குறைந்தது சில நூறு வார்த்தைகள் பேசுவது சமூக தொடர்புகளையும் அறிவாற்றல் செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுமாம்.

இதையும் படியுங்கள்:
‘தவத்துக்கு ஈடானது உண்மை பேசுதல்’ ஸ்ரீ அரவிந்த அன்னை!
Speaking

அதிகபட்ச வரம்பை மீறி பேசினால் ஏற்படும் விளைவுகள்:

தினசரி நாம் பேசுகின்ற அளவின் உச்ச வரம்பை மீறும்போது அது குரல் வலி (vocal strain) மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். குரல் நாண்களை(vocal cords) அதிகமாக பயன்படுத்துவதால் கரகரப்பு, தொண்டை புண் ஏற்படுகின்ற வாய்ப்புகள் உள்ளன. அதையும் மீறி சரியான முறையில் தொண்டை நிர்வகிக்கப்படாவிட்டால் நீண்ட கால சேதத்திற்கு வழிவகுக்கும். குரல்நாண் அல்லது தொண்டையை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது மற்றும் கத்துவதைத்(Shouting) தவிர்ப்பது போன்றவை உங்கள் குரல் வளத்தை பராமரிக்க உதவும்.

குறைந்தபட்சம் கூட பேசாமல் இருந்தால்:

மறுபுறம், மிகக் குறைவாகப் பேசுவது தனிமை மற்றும் சோர்வு போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். வாய்மொழி தொடர்பு இல்லாதது மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம், இது காலப்போக்கில் மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். அதனால், சமூகப் பிணைப்புகளையும் மன நலத்தையும் பேணுவதற்கு, ஓரளவிற்கு உரையாடல்களில் ஈடுபடுவது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
பிறருக்கு நம் மீது மரியாதையை ஏற்படுத்தும் 6 பழக்கங்கள்! 
Speaking

அதிகமாகவும், குறைவாகவும் இல்லாமல் உங்கள் குரலை எப்படி பராமரிக்கலாம்?

இடைவேளை (Schedule Breaks): உங்கள் வேலைக்கு தொடர்ச்சியான பேச்சு தேவைப்பட்டால், உங்கள் குரலுக்கு ஓய்வு கொடுக்க வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீரேற்றத்துடன் இருங்கள் (Hydrate): உங்கள் குரல் நாண்களை இயல்பாக வைக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.

நல்ல தோரணையைப் பயிற்சி செய்யுங்கள்: நீங்கள் உட்காரும் விதம், நிற்கும் விதம், முதுகெலும்புடன் உங்களின் தொடர்பு, போன்றவற்றை நினைவில் வைத்து பேசும் போது உங்கள் குரல் நாண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!
Speaking

சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்: தொலைபேசி அழைப்புகள், வீடியோ அரட்டைகள் அல்லது நேரில் சந்திப்புகள் மூலம் சமூக தொடர்புகளுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். அதே சமயம் எதையும் உபயோகிக்காமல் இருந்தால் அது வும் பிரச்சனையே. இதை மனதில் வைத்து தேவைக்கேற்றார்போல் நம் பேச்சை வெளிப்படுத்தினாலே எந்த ஒரு எதிர்மறை தாக்கமும் நம்மை அண்டாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com