BSNL 5ஜி சேவை எப்போது?

BSNL 5G service.
BSNL 5G service.
Published on

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்து நிறுவனத்தின் தலைவர் பிரவீன் குமார் பூர்வர் தெரிவித்து இருப்பது.

தொலைத் தொடர்பு துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது பிஎஸ்என்எல். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் தொலைத்தொடர்பை எளிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற மக்களுக்கும் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொடக்க முயற்சியே இந்திய தொலைத்தொடர்புத் துறை வரலாற்றில் முக்கிய அங்கம்.

இதே சமயம் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மேலும் எதிர்க்கட்சியினர் 5ஜி சேவைக்கான அங்கீகாரத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு துறை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தினுடைய தலைவரும், நிர்வாக இயக்குனருமான பிரவீன் குமார் தெரிவித்திருப்பது, தொலைத்தொடர்பு துறை வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது கல்விக்கான முன்னேற்றம். தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அங்கம். இன்றைய அதிநவீன வாழ்க்கைச் சூழலில் தொலைத்தொடர் துறை மிக முக்கிய பங்காற்று வரக்கூடிய நேரத்தில் பிஎஸ்என்எல் தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதிப்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவையை தடையின்றி வழங்க தீவிர முயற்சி எடுத்து உறுதிப்படுத்தி வருகிறோம். பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 4ஜி சேவை தற்போது தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஒன்றிய அரசு 6 லட்சம் கிராமங்களுக்கான ஃபைபர் சேவையை உறுதிப்படுத்த தீவிர செயல்பாட்டை முன்னெடுத்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
3 ஆப்கன் வீரர்களுக்கு 2024 IPL போட்டியில் பங்கேற்க தடை?
BSNL 5G service.

இந்தியாவின் கடலோரப் பகுதிகள், கிராமப்புற பகுதிகள், மலைப்பிரதேசங்கள் என்று அனைத்து பகுதிகளிலும் தடையற்ற 5ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் முடிவு செய்து இருக்கிறது. மேலும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் கொண்டு செல்லும் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com