BSNL-ன் புதிய சோதனை வெற்றி - 'Direct To Device' - இனி சிம் கார்டு இல்லாமல் போன் பேசலாம்!

BSNL
BSNL
Published on

இந்தியாவில் டெக்னாலஜியின் உதவியோடு பல்வேறு துறைகள் பல புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து வளர்ந்துகொண்டே வருகின்றன. தகவல் தொழில்நுட்ப துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. BSNL எனப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம், முன்னணியில் உள்ள பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவில் இயங்கி வருகிறது. அதன் பொருட்டு,  இந்நிறுவனம் நாடு முழுவதும்  4G சேவையை   வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், BSNL நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்பச் சோதனையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்திய செயற்கைக்கோள் நிறுவனமான வியாசாட் (Viasat) உடன்  BSNL நிறுவனம் இணைந்து, 'Direct -To-Device' என்ற தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

'Direct -To-Device' என்பது சிம் கார்டு இல்லாமல் போன் பேசலாம் என்பதை  அடிப்படையாகக் கொண்டது. இன்றைய காலகட்டத்தில் சிம் கார்டு இல்லாமல் போன் பேசுவது என்பது சாத்தியமானதே. இதற்கு வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் சேவைகள்(VOIP) முதல் வழக்கமாக போன்கால் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் செல்போன் கோபுரங்கள் மற்றும் Wi-Fi  நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் தொழில்நுட்பம் வரை ஏராளமான வழிமுறைகள் உள்ளன.  இருப்பினும், இவற்றில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன.

ஆனால், இதுபோன்ற எவ்வித கேபிள் இணைப்புகள் செல்போன் கோபுரங்கள் மற்றும் நெட்வொர்க் போன்றவற்றின் உதவி இல்லாமல் நேரடியாக  செயற்கைக்கோளின் வழியாக அழைப்புகளை மேற்கொள்ள 'Direct -To-Device' தொழில்நுட்ப சேவை உதவுகிறது. அதோடு, ios, ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் கார்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற ஸ்மார்ட் டிவைசஸ் என  எந்தவொரு சாதனங்களையும் நேரடியாக இணைக்க முடியும் மற்றும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்கள் ஸ்மார்ட் ஃபோனை எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா? 
BSNL

இந்த 'Direct -To-Device' தொழில்நுட்பம் அறிமுகமானால், வாடிக்கையாளர்கள், சிம்கார்டு மற்றும் நெட்வொர்க் இன்றி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தில் உள்ள கூடுதல் அம்சம் என்னவென்றால், நெட்வொர்க் கிடைக்காத இடங்களிலும் கூட சிம்கார்டு பயன்பாடு இல்லாமால் வாடிக்கையாளர்களால் தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு நம்பகமான தொலைதொடர்பு சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வரும்காலத்தில், இந்த 'Direct -To-Device' சேவையானது, பேரழிவுகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் போன்ற கடினமான சூழ்நிலைகளில், மக்களின் உயிர்களை காக்க பேருதவியாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. அதோடு, காடுகளிலோ அல்லது நெட்வொர்க் கிடைக்காத வேறு சில ஆபத்தான இடங்களிலோ மக்கள் யாரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களைக் காக்கவும் இந்த 'Direct -To-Device'  உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com