ஒரு துளி போதும்... 26 கொடிய பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும்! அது எது?

tears of camel and venom skake
Tears of camel
Published on

பொதுவாக, ஒட்டகங்களை பொதி சுமக்கும் விலங்காகவும், பாலைவனத்தில் பயணம் செய்ய உதவும் விலங்காகவும்தான் பார்த்திருப்போம். ஆனால், ஒட்டகத்தைப் பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவலை ஒரு ஆய்வு கூறுகிறது.

தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம் (National Research Centre on Camel) ராஜஸ்தானின் பிகானேரில் அமைந்துள்ளது. இது ஒட்டகங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் பாலைவனப் பகுதிகளில் அவற்றின் சமூக-பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிப்பதற்கான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளும் அமைப்பாகும்.

இந்த அமைப்பு செய்த ஒரு ஆராய்ச்சியில் ஒட்டகத்தின் கண்ணீர் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது. அது, ஒட்டகத்தின் ஒரு துளிக் கண்ணீர் சுமார் 26 கொடிய பாம்புகளின் விஷத்தை முறியடிக்குமாம்! நம்ப முடியவில்லையா?

ஒட்டகத்தின் கண்ணீரில் இருந்தும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் இருந்தும் கிடைக்கின்ற ஆன்டிபாடிகள் பாம்பு விஷத்தை அப்படியே முறியடிக்க வல்லதாம்.

குறிப்பாக, மிக கொடிய விஷமுள்ள (Viper) பாம்பின் விஷத் தன்மையைக் கூட முறியடிக்கக்கூடியதாம்.

ஒட்டகத்தில் உள்ள ஆன்டிபாடிகள் பாம்பு விஷத்தினால் ஏற்படும்   முக்கிய பாதிப்புகளான இரத்தக் கசிவு, இரத்தம் உறைதல் போன்றவற்றை தடுக்கிறதாம்.

மற்ற ஆன்டிவெனம்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது. அதே சமயம் இதனால் உண்டாகும் பக்கவிளைவும் குறைவு. உற்பத்தி செய்வதும் மிகவும் சுலபமாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, ஒட்டகம் வளர்க்கின்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு சூப்பர் வாய்ப்பை உருவாக்கி உள்ளது. அவர்கள் ஒட்டகங்களின் கண்ணீர் மாதிரிகளை சேகரித்து தேசிய ஒட்டக மையத்திற்கு கொடுத்தால், மாதத்திற்கு ₹5,000 முதல் ₹10,000 வரை அவர்கள் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சாமிக்கு மட்டும் இல்ல... உங்க சமையலுக்கும் இந்த 5 பூக்கள் பெஸ்ட்! - ஆரோக்கிய ரகசியங்கள்!
tears of camel and venom skake

மேலும், Serum Institute of India போன்ற பெரிய மருந்து கம்பெனிகளும்  தற்போது ஒட்டக ஆன்டிபாடிகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 58,000 பேர் பாம்புக்கடியால் இறந்து போகின்றனர். இது உலகிலேயே அதிகம். இந்தக் கண்டுபிடிப்பு கிராமப்புற மக்கள் மலிவான, பாதுகாப்பான மருத்துவ உதவியைப் பெற ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்துள்ளது.

மேலும், இதுவரைக்கும் பாரம் தூக்கப் பயன்படும் ஒட்டகம், அதனுடைய தனித்துவமான நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் எந்தக் கஷ்டத்தையும் தாங்கும் சக்தி போன்ற பண்புகளால் இந்தியாவின் மருத்துவ மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com