சில வகையான பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு உண்ணவும் ஏற்றவை. இவற்றை சாமி படங்களுக்கு சூட்டலாம். சமையலிலும் பயன்படுத்தலாம். ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் ஏழு வகையான பூக்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
காதலின் சின்னமாக கருதப்படும் ரோஜா ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாக பயன்படுகிறது. சருமப் பளபளப்பையும் மேம்படுத்துகின்றன. ரோஜாவில் விட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் பினாலிக்சில் நிறைந்துள்ளன. இவை பெண்களின் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகின்றன. ரோஜா இதழ்களை இனிப்பு வகைகள், ஸ்மூத்திகள், ரோஸ் டீ, ஜாம், ஜெல்லி போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். ஜாம் மற்றும் சாலடுகள் செய்யலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் விட்டமின் சி ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகின்றன.
சாமந்தி பூக்கள் தங்க நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இதன் இதழ்களை தேநீர் தயாரிக்க பயன்படுத்தலாம். சூப்புகள், சாலடுகள் போன்றவை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். சாமந்தியில் இருக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்பு தோல் அலர்ஜி மற்றும் முகப்பரு போன்றவற்றை குறைக்கின்றன. உடல் செரிமானத்தை குடல் செரிமானத்தை ஆதரிக்கின்றன. ஒட்டுமொத்த செல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை தணிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
லெமன் டீ மூலிகை டீ போன்றவற்றில் இவற்றை சிறிதளவு சேர்க்கலாம். இந்த நறுமணம் உள்ள ஊதா நிறப் பூ மன அமைதியை ஏற்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். மனப்பதட்டத்தைப் போக்க உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சைக் காளான் பண்புகளை கொண்டிருக்கிறது. குடல் ஆரோக்கியத்தை ஆதரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. தலைவலி மற்றும் பதற்றத்தை நீக்குகிறது.
நீல நிறத்தில் இருக்கும் இந்த அற்புதமான மலர் ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது நினைவாற்றல், கவனம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது. மனத் தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை ஆதரிக்கிறது. சரும சுருக்கங்களைத் தடுத்து இயற்கையான முறையில் முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடுகிறது. இளமைத் தோற்றத்தை தக்க வைக்கிறது. இந்தப் பூவின் இதழ்களை தேநீராக காய்ச்சி அருந்தலாம். இது நல்ல பார்வைத் திறனையும் ஊட்டச்சத்து மேம்பாட்டையும் அளிக்கிறது.
முக்கியக் குறிப்பு: மேற்கண்ட பூக்களை சமையலில் பயன்படுத்தும் முன் அவற்றில் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்பகமான இயற்கை விவசாயிகளிடமிருந்து இவற்றை வாங்கலாம் அல்லது சொந்தத் தோட்டத்தில் இந்தப் பூக்களை வளர்த்து பயன்படுத்தலாம்.