சுனாமி வந்தால் அதில் Surfing செய்து தப்பிக்க முடியாதா? 

surfing
Tsunami
Published on

சுவாமி என்பது கடலில் ஏற்படும் ஒரு பேரழிவுகரமான நிகழ்வு. இது நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புகள் அல்லது கடல் சார்ந்த நிலச்சரிவுகள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இந்த அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை கரையைக் கடக்கும்போது பெரும் அளவிலான சேதத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சுனாமியின் போது வரும் பேரலைகளில் நாம் Surfing செய்து தப்பிக்க முடியாதா? என்னும் கேள்வி பலருக்கு எழும். அதற்கான சாத்தியக்கூறுகளை இப்பதிவில் பார்க்கலாம். 

வெளிநாட்டவர்கள் சாதாரணமான அலைகளில் சர்ஃபிங் போர்ட் பயன்படுத்தி அப்படியே சறுக்கிக் கொண்டு போவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சுனாமி அலைகள் சாதாரண அலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. குறிப்பாக சுனாமி அலைகள் கரையை நெருங்கும் போது அவை அதிக உயரம் மற்றும் வேகத்துடன் பெரும் ஆற்றலை வெளியிடும். அத்தகைய அலையில் நம்மால் சாதாரணமாக சர்ஃபிங் செய்ய முடியாது. ஒருவேளை நீங்கள் அதில் சர்ஃபிங் செய்யலாம் என முயற்சித்தால், அதிவேகமாக உங்களை இழுத்துச் சென்று எதிலாவது மோதிவிடும்.  

சுனாமி அலைகளின் தன்மையை யாராலும் கணிக்க முடியாது. அது எப்போது வரும் எவ்வளவு உயரமாக இருக்கும் என்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதால், அவை வரும்போது திடீரென சர்ஃபிங் செய்வது முற்றிலும் கடினம். அவ்வாறு முயற்சிப்பவர்கள் நிச்சயம் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். 

சுனாமி அலைகள் கடலில் உள்ள குப்பைகளை கரைக்கு வேகமாக கொண்டு வரும். இதன் காரணமாக அந்த அலையில் நம்மால் சர்ஃபிங் செய்ய முடியாது. அவ்வாறு வரும் குப்பைகள் வேகமாக உங்களை அழுத்தி உங்களை காயப்படுத்தலாம். சர்ஃபிங் செய்வதற்கு ஏதுவாக சுனாமி அலைகள் சீராக வராது. அவை தொடர்ச்சியாக பல அலைகளைக் கொண்டு வரும். ஒருவேளை முதலில் வரும் அலையில் நீங்கள் எப்படியோ சர்ஃபிங் செய்து தப்பித்தாலும், அடுத்ததாக வரும் பெரிய அலைகளால் நீங்கள் நிச்சயம் தாக்கப்படுவீர்கள். இது உங்களை முற்றிலுமாக நிலைகுலையச் செய்து தண்ணீரில் மூழ்கடித்துவிடும். 

இதையும் படியுங்கள்:
சுனாமி எனும் பெருங்கடல் சீற்றம் எப்படி ஏற்படுகிறது?
surfing

எனவே நீங்கள் சுனாமி எச்சரிக்கை பகுதிகளில் இருந்தால், இப்படியெல்லாம் விபரீதமாக சுனாமியில் ஸ்விம்மிங் போட்டு தப்பித்துவிடலாம் என யோசிக்காதீர்கள். உங்கள் பகுதியில் சுனாமி வரப்போகிறது என்றால் நிச்சயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பார்கள். அவர்களது அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, உடனடியாக உயரமான இடத்திற்கு சென்று உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

சுனாமியில் சர்ஃபிங் செய்வது மிகவும் ஆபத்தானது. இது உயிரிழப்புக்குக் கூட வழிவகுக்கும். எனவே கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சுனாமி எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். இதனால் சுனாமி ஏற்படும்போது உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com