Chandrayaan Propulsion Module.
Chandrayaan Propulsion Module.

சுற்றுவட்ட பாதைக்கு திரும்பிய சந்திரயான் உந்து கலன்!

Published on

பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு திரும்பிய சந்திரயான் உந்து கலன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக இருந்த நிலவை ஆய்வு செய்யும் முயற்சி சந்திரயான் மூன்று செயல்திட்டத்தின் மூலமாக வெற்றி பெற்றது. சந்திரயான் மூன்று திட்டத்தின் மூலம் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி துறை புதிய முன்னேற்றத்தை கண்டிருக்கிறது.

இந்த நிலையில் சந்திராயன் மூன்று விண் களத்தில் லேண்டர் மற்றும் ரோவரை சுமந்து சென்ற உந்து விசைக்கலன் மீண்டும் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு திரும்பி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. ப்ரொபல்ஷன் மாட்யூல் என்ற உந்துவிசை பகுதியை மிக எளிய நடைமுறையின் மூலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து திருப்பி மீண்டும் பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் கொண்டு வந்திருக்கின்றோம். இது மிகவும் தனித்துவமான செயல்பாடு என்று தெரிவித்து இருக்கிறது. இலகுவான உந்துவிசைக் கலம் ப்ரொபல்ஷன் மாட்யூலின் தற்போதைய செயல்பாடு இந்திய விண்வெளித் துறை கண்டிருக்கக்கூடிய புதிய முன்னேற்றம்.

இஸ்ரோ ஆரம்பத்தில் நிலவைச் சுற்றி பி.எம் சுற்றுப்பாதையின் உயரத்தை 150 கிமீ முதல் 5112 கிமீ வரை உயர்த்தியது. பிறகு டிரான்ஸ்-எர்த் இன்ஜக்சன் செயல்முறை செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து சந்திர சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறுவதற்கு முன் உந்துவிசை தொகுதி நான்கு மூன் ப்ளை பை மிஷன் செய்தது.

இதையும் படியுங்கள்:
அடுத்த டார்கெட்டுக்கு ரெடி.. சந்திரயான் 4க்கு ப்ளான் போட்ட இஸ்ரோ!
Chandrayaan Propulsion Module.

தற்போது உந்துவிசை தொகுதி பூமியை சுற்றி வருகிறது மற்றும் 1.54 லட்சம் கிமீ உயரத்தில் அதன் முதல் பெரிஜியை கடக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுப்பாதையின் காலம் ஏறக்குறைய 13 நாட்கள் ஆகும். அதன் பாதையில் பெரிஜி மற்றும் அபோஜி உயரம் மாறுபடும் மற்றும் கணிக்கப்பட்ட குறைந்தபட்ச பெரிஜி உயரம் 1.15 லட்சம் கிமீ ஆகும். பூமி அதன் பார்வையில் இருக்கும் போது பேலோட் தொடர்ந்து இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com