நிலவில் எரிமலைகளைக் கண்டுபிடித்த சீனா… எதிர்காலக் கனவு பலிக்குமா? 

Moon Volcano
Moon Volcano
Published on

சீனா, நிலவை ஆய்வு செய்வதில் முன்னணி நாடாகத் திகழ்கிறது. பல விண்கலங்களை அனுப்பி நிலவின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. சமீப காலங்களில் நிலவைப் பற்றிய நமது புரிதல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் சாங்கே-4 விண்கலம், நிலவின் தொலைதூர பகுதிக்கு சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, சாங்கே-5 விண்கலம் நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது.

இப்போது, சாங்கே-6 விண்கலம் நிலவின் தென் அரைக்கோளத்தில் உள்ள அப்பல்லோ பேசின் எனப்படும் பகுதியிலிருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது. இந்தப் பகுதி, நிலவின் மிகவும் பழமையான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இருந்து சேகரிக்கப்பட்ட பாறைகள், சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 420 கோடி ஆண்டுகள் பழமையான ஒரு பாறை மாதிரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிப்பு, நிலவின் வரலாறு குறித்த நமது புரிதலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. ஏனெனில், இதுவரை நாம் நினைத்ததை விட நிலவில் எரிமலை செயல்பாடு நீண்ட காலமாக இருந்துள்ளது என்பதை இந்த பாறைகள் உறுதிப்படுத்துகின்றன. நிலவின் தென் அரைக்கோளத்தில் உள்ள பள்ளங்களில் எரிமலையின் வெப்பமான மக்மாக்கள் பாய்ந்தோடி உள்ளதற்கான சான்றாக இந்த பாறை மாதிரிகள் கிடைத்துள்ளன.

நிலவின் இரண்டு அரைக்கோளங்களும் ஏன் வேறுபடுகின்றன?

நிலவின் தென் அரைக்கோளத்தில் எரிமலை செயல்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனால், பூமிக்கு அருகே உள்ள நிலவின் பகுதிகளில் இதுபோன்ற எந்த எரிமலை பாறைகளின் மாதிரிகளும் கிடைத்ததில்லை. நிலவின் இரண்டு அரை கோளங்களும் ஏன் இப்படி மிகவும் வேறுபட்டுள்ளன என்பது மர்மமாகவே உள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நிலவின் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட வேறுபாடுகள் இருக்கலாம். அல்லது, பின்னர் ஏற்பட்ட பெரிய விண்கற்கள் மோதல்கள் காரணமாக இந்த வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். இன்னொரு காரணமாக, நிலவின் உள் அமைப்பில் இருக்கும் வேறுபாடுகளும் கூறப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்குப் பிடித்த டெடி பியர் பொம்மைகளுக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா?
Moon Volcano

இந்த கண்டுபிப்பின் முக்கியத்துவம்: நிலவின் தென் அரைக்கோளத்தில் இருந்து கிடைத்துள்ள இந்த பாறைகள், நிலவின் வரலாறு, உருவாக்கம் மற்றும் பரிணாமம் குறித்து புதிய பார்வையைத் திறந்துள்ளது. இந்த கண்டுபிப்பின் மூலம், நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மேலும் ஆராய்ச்சி செய்ய முடியும்.

மேலும், இந்த கண்டுபிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. நிலவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கனிம வளங்கள் குறித்து மேலும் ஆய்வு செய்ய முடியும். எதிர்காலத்தில், நிலவில் மனித குடியிருப்புகளை உருவாக்கவும் இந்த ஆராய்ச்சிகள் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com