இன்று, இந்தியாவின் சில பகுதிகளில் 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் சீராக இயங்கவில்லை. மேலும், 5G சேவையும் முழுமையாக கிடைப்பதில்லை. இந்த சூழலில், சீனா அதன் அதிவேக 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி உலகை வியக்க வைக்கின்றது.
நவீன உலகில் இணையம் என்பது வாழ்வின் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பணபரிமாற்றம், வீடியோ கால், ஆன்லைன் வகுப்புகள், வணிகம் சார்ந்த கலந்துரையாடல்கள், பொழுதுபோக்கு என அனைத்திற்குமே அதிவேக இணைய சேவை தேவைப்படுகிறது. இந்த தேவையை உணர்ந்த சீனா, தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
ஹுவாய் என்ற பிரபல சீனா நிறுவனமும், சீன யூனிகாம் என்ற அரசு நிறுவனமும் இணைந்து ஹுபே மாகாணத்தின் சுனான் கவுண்டி எனும் பகுகளில் முதற்கட்டமாக இந்த 10ஜி சேவையை தொடங்கியுள்ளது.
இந்த 10ஜி இணைய வேகம் சாதாரண இணையவேகம் போல இல்லாமல் நொடிக்கு 9,834 மெகாபைட் வேகத்தில் பதிவிறக்க அதிவேகத்தை அளிக்கிறது.
இதற்கு பின்னால் உள்ள முக்கியமான தொழில்நுட்பம் 50ஜி பான் என்று சொல்லப்படும் பாசிவ் ஆக்ட்டிவ் நெட்வொர்க் ஆகும்.
கூடுதல் சிறப்பம்சமாக, இந்த 10ஜி சேவையில் 1008 மெகாபைட்கள் வரையில் பதிவேற்ற வேகமும் கிடைக்கிறது. இதன் மூலம்,பெரிய வீடியோக்கள், தரவுகளை ஒரே நொடியில் பகிர முடியும். இவ்வளவு சிறம்பசம் கொண்ட இந்த 10ஜி சேவையை சில நாடுகள் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக இதனை மிக பெரிய முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
இணையவேகத்தில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தி தொழில்நுட்பத்தில் அசாதாரண வளர்ச்சியை ஏற்படுத்திய சீன நாட்டின் இந்த சாதனை, உலகம் போற்றும் வகையில் பரவியுள்ளது. இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் சில சவால்கள் முன்னிலையில் உள்ளன.
எதிர்க்கும் சாவல்கள் என்ன?
தொழில்நுட்ப வளர்ச்சி நமக்குப் புதிய வாய்ப்புகளை அளிப்பதோடு, சில சவால்களையும் முன்வைக்கின்றன.
முதலாவதாக, தற்போது ஹுபே மாகாணத்தில் மட்டுமே தொடங்கியுள்ள இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த, பரந்த கட்டமைப்புகள் தேவைப்படும். இதற்காக புதிய டவர்கள், நெட்வொர்க் வசதிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவ வேண்டியிருப்பதால், கட்டுமானச் செலவுகள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கின்றன.
மேலும், தரவுப் பாதுகாப்பும் முக்கிய சவால்களில் ஒன்றாகத் தோன்றுகிறது. வேகமான தரவுப் பரிமாற்றம் சைபர் தாக்குதல்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியமாகிறது.
அதே நேரத்தில், சர்வதேச ஒப்புதல்கள் மற்றும் அரசியல் தடைகளும் கவனிக்க வேண்டிய விஷயங்களாகும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சில மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த சேவையின் உலகளாவிய ஒத்துழைப்பில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
மேலும், 10ஜி சேவையை பயன்படுத்துவதற்கு அதற்கேற்ற அதிநவீன சாதனங்கள் தேவைப்படும். இது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாதனங்களில் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
இவற்றுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கேள்விகளும் எழுகின்றன. புதிய இணைய சேவை உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதால், இவ்விதமான பாதிப்புகள் குறைவாக அமைய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால், 10ஜி இணைய சேவை ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருந்தாலும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்தும் செயல்முறையில் பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.