
விண்வெளியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்க சைனா ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்னெடுக்கிறது. இது வெறும் ராக்கெட் ஏவுதல் இல்லை - மின்காந்த ராக்கெட் லாஞ்ச் பேட் (electromagnetic launch pad) என்ற புரட்சிகர தொழில்நுட்பம்! 2028-ல் இதை உலகிற்கு அறிமுகப்படுத்த சைனா தீவிரமாக பணியாற்றுகிறது. இதை அறியும்போது, 'அடேங்கப்பா!' என்று உலகமே வியப்பது நிச்சயம்!
மின்காந்த சக்தியால் விண்ணைத் தொடும் பயணம்
பொதுவாக ராக்கெட்டுகள் எரிபொருளை எரித்து, புகையும் சத்தமுமாக விண்ணை நோக்கி பறக்கும். ஆனால், சைனாவின் இந்த புதிய தொழில்நுட்பம் முற்றிலும் மாறுபட்டது. மின்காந்த சக்தியை (electromagnetic force) பயன்படுத்தி, ராக்கெட் எஞ்சினை இயக்கும் முன்பே சூப்பர்சோனிக் வேகத்திற்கு (supersonic speed) உயர்த்திவிடும். இதை ஒரு மேக்லெவ் ரயில் (maglev train) செங்குத்தாக விண்ணை நோக்கி பறப்பது போல கற்பனை செய்யுங்கள் - சத்தமின்றி, சீராக, அதிவேகமாக!
இந்த திட்டத்தின் மையத்தில் கேலக்டிக் எனர்ஜி (Galactic Energy) என்ற தனியார் விண்வெளி நிறுவனம் உள்ளது. சைனாவின் சிச்சுவான் மாகாணத்தில், அரசு ஆதரவு பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இதை உருவாக்குகிறது. சூப்பர்கண்டக்டிங் மின்காந்தங்களை (superconducting magnets) பயன்படுத்தி, ராக்கெட்டை மேக் 1 (Mach 1) வேகத்திற்கு மேல் உயர்த்தி, பின்னர் எஞ்சினை இயக்கி விண்ணுக்கு அனுப்பும் முறை இது.
விண்வெளி பயணத்தில் புதிய அத்தியாயம்
இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், விண்வெளி பயணம் புரட்சிகரமாக மாறும். ஜியாங் கமர்ஷியல் ஸ்பேஸ் லாஞ்ச் டெக்னாலஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் லி பிங் கூறுகையில், "இந்த மின்காந்த சிஸ்டம் பேலோடு திறனை (payload capacity) இரு மடங்காக உயர்த்தும்; ஏவுதல் செலவை பாதியாக குறைக்கும்" என்றார். பழைய லாஞ்ச் பேட்களுக்கு தேவையான பராமரிப்பு இதற்கு தேவையில்லை, எனவே அடிக்கடி ஏவுதல்கள் சாத்தியமாகும்.
இதன் மூலம், சாட்டிலைட்டுகளை விண்ணுக்கு அனுப்புவது அதிவேக ரயில் பயணம் போல சுலபமாகிவிடும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமையும்.
கேலக்டிக் எனர்ஜி நிறுவனத்தின் முன்னேற்றம்:
2018-ல் தொடங்கப்பட்ட கேலக்டிக் எனர்ஜி, 18 வெற்றிகரமான ஏவுதல்களை நிகழ்த்தி, 77 சாட்டிலைட்டுகளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது—சைனாவின் மற்ற தனியார் விண்வெளி நிறுவனங்களை விட இது அதிகம். மார்ச் 21 அன்று, செரெஸ்-1 (Ceres-1) ராக்கெட் மூலம் ஆறு வானிலை சாட்டிலைட்டுகளை சன்-சின்க்ரோனஸ் ஆர்பிட்டுக்கு அனுப்பியது.
இப்போது செரெஸ்-2 (Ceres-2) ராக்கெட்டை உருவாக்குகிறது. இது 3.5 டன் பேலோடு திறனுடன், செரெஸ்-1-ஐ விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது தொழிற்சாலையை கட்டத் தொடங்கி, ஆண்டுக்கு 24 செரெஸ்-2 ராக்கெட்டுகளை உற்பத்தி செய்ய பிளான் செய்துள்ளது.
சிச்சுவான்: விண்வெளி உற்பத்தி மையமாக மாறும்
சிச்சுவான் மாகாணத்தின் ஜியாங் அரசு, 2027-க்குள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் ராக்கெட் உற்பத்தி மையமாக மாற பிளான் செய்துள்ளது. சைனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் (CASIC), 2023 செப்டம்பரில் மின்காந்த டெஸ்ட் நடத்தி, 380 மீட்டர் பாதையில் 234 கி.மீ/மணி வேகத்தை எட்டியது.
உலகிற்கு ஒரு புதிய பாதை
சைனாவின் இந்த முயற்சி, விண்வெளியில் ஆசியாவை முன்னணியில் நிறுத்தும். மின்காந்த லாஞ்ச் பேட் மூலம், செலவு குறைவாகவும், பயனுள்ளதாகவும் விண்வெளி பயணம் மாறும். இது உலக அரங்கில் சைனாவின் புதிய அடையாளமாக அமையும்!