
கோலோன் ஹைட்ரோ தெரபியா? இது என்ன புது தெரபியாக உள்ளது என ஆச்சரியப்படலாம். இயற்கை மருத்துவத்தில் இது ஒரு வகையான சிகிச்சை ஆகும். இயற்கை மருத்துவத்தில் பெருங்குடலை சுத்தம் செய்யும் முறைக்கு பெயர் தான் கோலோன் ஹைட்ரோ தெரபி என்று பெயர். எப்படி நிலத்தில் நீரை பாய்ச்சுகிறோமோ அது போன்று நம் உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் கழிவுகளை வெளியேற்றவும் இந்த சிகிச்சை நல்ல பயன் தருகிறது.
எனிமா மூலம் நம் உடலில் இரண்டரை லிட்டர் தண்ணீரை உள்ளே செலுத்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது ஒருமுறை. ஆனால் கோலோன் தெரபி மூலம் 68 லிட்டர் தண்ணீர் ஒரு சிறிய குழாய் மூலம் நம் பெருங்குடலுக்குள் செலுத்தப்படுகிறது. அந்த நீரானது உடல் முழுவதும் மூலை முடுக்கலாம் சென்று உடலில் தங்கி உள்ள இறந்த செல்கள் நச்சுக்கழிவுகள் வேறு எந்த கழிவாக இருந்தாலும் அவை வெளியேற்றப்படுகிறது. இதற்குப் பெயர்தான் கோலான் ஹைட்ரோ தெரபி. இதன் மூலம் நம் உடல் புத்துணர்ச்சி பெருகிறது.
நம் உடம்பில் உள்ள அனைத்து பாகங்களும் சுத்தம் செய்யப்பட்டு நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் இந்த தெரபியை ஆண்டுக்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
இயற்கை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் இந்த செயல்பாடு நடைமுறையில் உள்ளது.