

நீங்கள் உங்கள் இனிமையான பயண நினைவுகளுக்காகக் கார் (Car) வாங்கி இருக்கிறீர்களா அல்லது வாங்கப் போகிறீர்களா? இல்லை... வெறும் பந்தாவிற்கு மட்டும் தானா?
ஒரு காரின் எஞ்சின் அதற்குப் பொருத்தமானதா? இல்லையா? என்பதைக் கண்டறிய தொழில்நுட்ப நிபுணத்துவம் (technical expertise) தேவையில்லை. அதைச் சிறிது நேரம் பயன்படுத்தும்போதே கண்டுபிடித்து விடலாம். காரணம் காருக்கு நன்கு பொருந்தக்கூடிய ஒரு எஞ்சின் சீரான வேக அதிகரிப்பு (smooth acceleration) வழங்க வேண்டும். நீங்கள் பெடலை (Accelerator) எப்படி அழுத்துகிறீர்களோ அதற்கேற்றாற்போல் கட்சிதமாக (Quick or slow) செயல்பட வேண்டும்.
எரிபொருள் சிக்கனத்தை அனைத்து சூழ்நிலையிலும் (Slope or heavy traffic) பராமரிக்க வேண்டும். கூடவே, அதில் சிரமமின்றியும் செயல்பட வேண்டும் (without engine straining). இப்படி நகர்ப்புறப் போக்குவரத்தில் கார் சிரமமின்றி இயங்குவது போலவும், நெடுஞ்சாலைகளில் நமக்கு நம்பிக்கையுடன் ஓட்ட உதவுவது (confident drive on highways) போலவும் உணர்ந்தால், அந்த எஞ்சின் காரின் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
காருக்குப் பொருத்தமான எஞ்சின் ஏன் மிகவும் முக்கியம்?
உண்மையிலேயே பொருத்தமான எஞ்சின் கொண்ட ஒரு கார், அதில் பயணிக்கும் ஒவ்வொருக்கும் திருப்தியை(Satisfaction) அளிக்கிறது. காரணம் அது ஒரு மென்மையான, சிரமமற்றப் பயணத்தை (smooth, effortless ride) உறுதி செய்கிறது. இது ஓட்டுநர் கொடுக்கும் acceleration இயல்பாகவும், நிலையானதாகவும் அனைவராலும் உணரப்படுவதால் தான். அதோடு காரின் உட்புறம் அமைதியாகவும், கடுமையான அதிர்வுகளற்றதாகவும் (Vibrations) இருப்பதால், எந்தச் சோர்வும் இன்றி அனைவராலும் சுறுசுறுப்பாக பயணிக்க முடியும். இதோடு சிறந்த எரிபொருள் சிக்கனத்தாலும் பயனடையலாம்.
அதாவது குறைந்த இடைவெளி எடுத்துக் கொண்டு, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக காருக்கு நன்கு பொருந்தக்கூடிய ஒரு எஞ்சின் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை அதை ஓட்டுபவருக்குள் உருவாக்குகிறது. இறுதியில் இது பயணிக்கும் அனைவர்க்கும் தங்களின் ஒவ்வொரு பயணத்தையும் நம்பகமானதாகவும், சுவாரஸ்யமாகவும் உணர வைக்கிறது.
ஆக ஒரு எஞ்சினின் சக்தி மற்றும் செயல்திறனில் (power and efficiency) சரியான சமநிலையை (Balance) வழங்கும்போது, அது அந்தக் காருக்குப் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.
ஆனால், இன்றைய மக்களின் எண்ணப்போக்குகள்(Buying a car) எப்படி இருக்கிறது?
இன்றைய உலகில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகள் (flashy infotainment systems), ஆடம்பரமான உட்புறங்கள் அல்லது பிராண்டின் மதிப்பு போன்றவற்றால் திசை திருப்பப்படுகிறார்கள்.
இறுதியில், மனித இதயம் போன்ற காரின் முக்கியமான எஞ்சினை கணிக்க மறந்து விடுகிறார்கள். காரணம் மறைந்துள்ள இயந்திரச்(mechanical) செயல்திறனைவிட, வெளிப்படையாகத் தெரியும் அம்சங்களால்தான் (attractive features) இன்றைய மக்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
கணிக்கத் தவறினால் நாம் இழப்பது என்ன?
நாம் எஞ்சினின் உண்மையான திறனைத் தெரிந்துக் கொள்ளத் தவறினால் அதன் விளைவுகள் காலம்காலமாக தொடரும். ஒரு காருக்குப் பொருந்தாத எஞ்சின் குறைந்த மைலேஜ், மந்தமான செயல்திறன், அடிக்கடி பழுதுகள் மற்றும் அதிக பராமரிப்புச் செலவுகளுக்கு வழிவகுக்கும்.
காலப்போக்கில் இது பணத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், வாகனம் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது. இதைவிட மோசமாக திறமையற்ற எரிபொருள் பயன்பாடு (inefficient fuel use) மற்றும் அதிக மாசு உமிழ்வு (higher emissions) மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் இது பங்களிக்கிறது.