விண்வெளியில் கிறிஸ்துமஸ் மரம்.. எப்படி சாத்தியம்? 

Constellation looks like a Christmas tree.
Constellation looks like a Christmas tree.

விண்வெளி துறையில் பல பிரம்மிப்பூட்டும் விஷயங்களை சாதித்து காட்டி நாசா உலக நாடுகளை வியக்கச் செய்து வரும் நிலையில், பார்ப்பதற்கு கிறிஸ்மஸ் மரம் போல இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா. 

இன்னும் இரு தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ள நிலையில் உலகம் முழுவதும் அதற்கான கொண்டாட்டங்கள் கலை கட்டி உள்ளது. இத்தகைய கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வியப்பூட்டும் புகைப்படம் ஒன்றை நாசா அவர்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதாவது பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போலவே இருக்கும் விண்மீன் திரள் ஒன்றை நாசா படம்பிடித்துள்ளது. இதற்கு NCG 2264 என பெயர் சூட்டிய நாசா, இதன் வயது 5 கோடி ஆண்டுகள் வரை இருக்கலாம் என கணித்துள்ளது. 

இந்த விண்மீன் திரள் பூமியிலிருந்து 2500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது என்றும், பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போலவே நட்சத்திர கூட்டங்கள் உருவாகி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் நாசா கூறியுள்ளது. இதை நாசாவின் சந்திரா கண்காணிப்பகம் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. நம்முடைய சூரிய குடும்பத்திற்கு அடுத்தபடியாக இந்த விண்மீன் திரள்கள் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன. 

இதில் இருக்கும் நட்சத்திரங்களில் சிலது பூமியை விட சிறியதாகவும், சூரியனை விட பெரியதாகவும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றின் எடை சூரியனிலிருந்து பத்தில் ஒரு பங்கு குறைவாக இருக்கலாம் என்றும், சிலது சூரியனை விட ஏழு மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்:
எந்த நட்சத்திர தினத்தில் என்ன காரியம் வெற்றி தரும் தெரியுமா?
Constellation looks like a Christmas tree.

அந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு செல்லும் ஒளி மற்றும் அவற்றின் சுழற்சி காரணமாக அவை பச்சை நிறத்தில் கிறிஸ்துமஸ் மரம் போல காட்சியளிக்கிறது என விஞ்ஞானிகள் அந்த தோற்றத்திற்கான காரணத்தை விவரித்துள்ளனர். இருப்பினும் இந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் இத்தகைய காட்சி வியப்பூட்டும் வகையிலேயே இருக்கிறது. இணையத்தில் இந்த புகைப்படத்தை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com