Cotton candy planet: வியக்க வைக்கும் பஞ்சுமிட்டாய் கிரகம்!!

Cotton Candy Planet
Cotton Candy Planet
Published on

பிரபஞ்சத்தில் ஏராளமான அதிசயங்களும் அற்புதங்களும் தோண்டத் தோண்ட வரும். அந்தவகையில், பஞ்சுமிட்டாய் போல இருக்கும் கிரகமும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றுதான்.

அவ்வப்போது புது புது கிரகங்கள் நட்சத்திரங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்படும். இன்னும் எத்தனை எத்தனையோ ஆச்சர்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நமக்குத்தான் தெரிவதில்லை.

அந்தவகையில் விஞ்ஞானிகள் புதிதாக ஒரு வித்தியாசமான கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் ஜுப்பிட்டரை விட 50 மடங்கு அதிகம் என்றும், பிரபஞ்சத்திலேயே இரண்டாவது லேசான கிரகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சுமிட்டாய் போல லேசாகவும் பெரிதாகவும் இருக்கும் இந்த கிரகத்தின் பட்ட பெயர் பஞ்சுமிட்டாய் கிரகம். இதற்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர் Wasp 193b ஆகும். இந்த கிரகம் சூரிய குடும்பத்தையும் தாண்டி, பூமியிலிருந்து சுமார் 1,200 ஒளி ஆண்டுகள் அப்பால் உள்ளது.

இதற்கு மற்றொரு பெயரும் உள்ளது. அதாவது Pluffy Jupiter. இதன் அடர்த்தி அளவு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.059 கிராம் ஆகும். அதாவது, வியாழன் கோளை விட 7 மடங்கு அல்லது பூமியை விட ஒரு மடங்கு குறைவான அடர்த்தி கொண்டுள்ளது. 

அதேபோல் இந்த கிரகம் சுமார் 6 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த கிரகத்தை ஆய்வு செய்து வந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த கிரகத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவை இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பூமியில் உள்ள குப்பைகளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன ஆகும் தெரியுமா? 
Cotton Candy Planet

மேலும் இந்த கிரகம் மிகவும் பெரியது என்பதால், நிறைய ஒளி உள்ளே செல்லும் என்றும், அதேபோல் நட்சத்திரங்களின் நகர்வு பொருமையாக இருக்கும் என்றும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

இந்த ஆய்வின் அறிக்கை செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது. இதனையடுத்து, நெட்டிசன்கள், அந்த கிரகத்தில் வாழ முடியுமா? என்றும், பஞ்சுமிட்டாய் பிடிக்கும் நபர்களை அங்கு அனுப்பி வைய்யுங்கள் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

"மஜாவா இனிக்கிறியே பஞ்சுமிட்டாயா.. மிட்டாயா.." என்று பாடும்போதே இப்படி எதாவது நடக்கும் என்று எங்களுக்கு அப்பவே தெரியும்…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com