பூமியில் உள்ள குப்பைகளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன ஆகும் தெரியுமா? 

Earth's trash into space
Earth's trash into space
Published on

பூமி என்பது ஒரு அழகிய நீல கிரகம். ஆனால், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதிகரித்து வரும் மக்கள் தொகையும் பூமியை குப்பை மேடாக மாற்றி வருகின்றன. இந்த பிரச்சனைக்குத் தீர்வாக பூமியில் உள்ள குப்பைகளை விண்வெளிக்கு அனுப்பிவிடலாமா? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால், அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

பூமியில் குப்பைகள் அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, மண்வளம் குறைதல், உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிதல் போன்றவை இதில் முக்கியமானவை. இதற்குத் தீர்வாக பூமியில் உள்ள குப்பைகளை விண்வெளிக்கு அனுப்பினால் பூமி சுத்தமாகவும், மாசுபாடு இல்லாததாகவும் இருக்கும். இதனால், பூமியின் நிலம் மற்றும் நீர் வளங்கள் பாதுகாக்கப்படும். குப்பைகள் காரணமாக உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவது தடுக்கப்படும். 

குப்பைகளை விண்வெளிக்கு அனுப்பவதில் உள்ள சிரமங்கள்: 

நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதில் குப்பைகளை விண்வெளிக்கு அனுப்பிவிட முடியாது. சாதாரண உபகரணங்களை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பவே கோடிக்கணக்கான பணம் செலவாகிறது. இதில், டன் கணக்கிலான குப்பைகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது மிகவும் விலை உயர்ந்த காரியமாக இருக்கும். 

மேலும், விண்வெளிக்கு குப்பைகளை அனுப்புவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. விண்வெளிக்கு அனுப்பப்படும் குப்பைகள் திரும்பி பூமியில் விழுந்தால், பூமியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். விண்வெளியில் ஏற்கனவே சுற்றிவரும் செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் இந்த குப்பைகளால் பாதிக்கப்படும். 

இதையும் படியுங்கள்:
எதற்காக இந்த விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சிகள்?
Earth's trash into space

குப்பைகளை விண்வெளிக்கு அனுப்புவது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. பூமியில் குப்பைகள் உற்பத்தியாகிக்கொண்டு இருக்கும்வரை இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடையாது. விண்வெளிக்கு குப்பைகளை அனுப்புவதால் பல்வேறு விதமான மோசமான விளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சிக்கு நாம் பூமியில் அப்புறப்படுத்தும் குப்பைகள் பெரும் தடையாக இருக்கும். மேலும், நம்மைச் சுற்றியுள்ள கிரகங்களுக்கும் இந்தக் குப்பைகள் ஆபத்தை விளைவிக்கலாம். 

எனவே, பூமியில் உள்ள குப்பைகளை விண்வெளிக்கு அனுப்புவது எளிதான காரியம் அல்ல. இதில் பல சிரமங்களும் ஆபத்துகளும் உள்ளன. பூமியில் உள்ள குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், குப்பைகளைக் குறைப்பது, மறு சுழற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விண்வெளிக்கு குப்பைகளை அனுப்புவதற்கு பதிலாக பூமியில் உள்ள குப்பைகளை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com