கடலுக்கு அடியில் கருப்பு ஆக்ஸிஜன் (Dark Oxygen)

Dark Oxygen
Dark OxygenImg credit: www.smithsonianmag.com
Published on

பொதுவாக, தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையினால்தான் (Photosynthesis) நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், கடலுக்கு அடிப்பரப்பில் டார்க் ஆக்ஸிஜன் உருவாகிறது என்ற புதிய கண்டுபிடிப்பு தற்போது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. Dark secret, Dark matter, Dark hole பற்றியெல்லாம் தெரியும். அதென்ன டார்க் ஆக்ஸிஜன் என்று தானே கேட்கீறிர்கள் ?

கடலானது, 13,000 அடி ஆழத்தில் ஒளிச்சேர்க்கையை ஊக்குவிக்கும் சூரிய ஒளி இல்லாத இருள் சூழ்ந்த இடமாகத்தான் இருக்கும். அங்கு உருவாகும் ஆக்சிஜன் என்பதால்தான் இப்பெயரிட்டிருப்பார்கள் போல.

Andrew Sweetman , என்றவர் தான் இந்த கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தவர். இவர், UK இல் உள்ள கடற்பரப்பு சூழலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆராய்ச்சி குழுவின் தலைவராக உள்ளார். 2013 ஆம் ஆண்டு , 'கடலின் அடிப்பகுதியில் உள்ள உயிரினங்களால் எவ்வளவு ஆக்ஸிஜனை உட்கொள்ளப்படுகிறது' என்பதை அளவிடும் ஆராய்ச்சி குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.

இதையும் படியுங்கள்:
ஓர் அதிர்ச்சித் தகவல் - பூமியை விட்டு விலகும் நிலா! இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!
Dark Oxygen

கடலுக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட கடல்நீரில் ஆக்ஸிஜன் அளவை அளவிட ஒரு சென்சாரை பயன்படுத்தினர். அதில், அவர்கள் கணித்ததைவிட அதிகமான ஆக்ஸிஜன் அளவு இருந்ததைக் கண்டறிந்தனர். ஆரம்பத்தில், அவர்கள் பயன்படுத்திய சென்சார்கள்தான் பழுதடைந்துவிட்டதாக கருதி, புதிய சென்சார்களை பயன்படுத்தி 2022ல் திரும்பவும் மறு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கடலுக்கு அடியில் உருளைக்கிழங்கு வடிவிலான Battery rocks மற்றும் Metalic Nodules இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இவற்றை ஆய்வு செய்ததன் மூலம், இப்பாறைகள் கடல்நீருடன் வினைபுரிந்து மின்னாற்பகுப்பை ஏற்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது. அதாவது, இவை கடல்நீரில் உள்ள நீர் மூலக்கூறுகளான ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை தனித்தனியாக பிரிக்கின்றன.

இந்த கண்டுபிடிப்பு, ஒளிச்சேர்க்கை மூலமாக மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது என்ற பார்வையை முற்றிலுமாக மாற்றிஅமைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட்ட பாறைகளை வைத்து, தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால் அறியப்படாத, வியக்கத்தக்க பல தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற கிரகங்களிலும் இதுபோல ஆக்ஸிஜன் வேறு வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்ற நோக்கில் புதிய ஆராய்ச்சிக்கு இது வழி வகுத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com