டேஷ் கேமரா : கார்களில் பொருத்தப்படும் மூன்றாவது கண்!

டேஷ் கேமரா...
டேஷ் கேமரா...

ற்காலத்தில் இந்திய சாலைகளில் வாகனங்கள் பெருகி வரும் நிலையில், சாலை பாதுகாப்பு என்பது முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. இந்திய சாலைகளில் வண்டி ஓட்டுகையில் நீங்கள் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும், சாலையில் பிறர் செய்யும் தவறுகளால் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன.

அலட்சியமாக வாகனம் ஓட்டி கடுமையான சாலை விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள், குற்றங்களை நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், மிக எளிதாக தப்பிவிடுகின்றனர். இதனால் வாகனங்களில் (DASH CAM) டேஷ் கேமராக்களைப் பொருத்துவது  அவசியமாகிறது.

இந்த கேமராக்களால்  நாம் சாலைகளில் செல்லும் போது முன்பக்கம் தெரியும் அனைத்தையும் படம்பிடித்து சேமித்து வைக்க முடியும். சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்திச் செல்லும் வாகனங்களை கண்டறிய இந்த டேஷ் கேமராக்கள் பெரும் உதவியாக இருக்கிறது.
டாஷ்கேம் நிறுவப்பட்டால், வாகன உரிமையாளர் சாலை விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது எளிதாகிவிடும். டாஷ்கேம் வாயிலாக படமாக்கப்பட்ட காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு எளிதாக இருக்கும். இத்தகைய பதிவுகளை நீதிமன்றத்தில் சாட்சியமாகவும் சமர்ப்பிக்க முடியும்.

உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வுக்கும் சாட்சியாக, சான்றாக டாஷ்கேம் மூன்றாவது கண்போல செயல்படுவதால் அவசர காலங்களில் இந்தப் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.  செய்யாத தவறுக்காக நீங்கள் சந்திக்க நேரிடும் பெரும்பாலான பிரச்னைகளை எளிதில் கையாள உதவுகிறது.

நீங்கள் அறியாமலேயே யாரேனும் உங்கள் வாகனத்தை இடித்து விட்டுச் சென்றாலும், டேஷ் கேமராவால் சம்பவத்தை ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு எண்ணை சிரமமில்லாமல் கண்டறிய  முடியும். சரியான தேதி மற்றும் நேரத்துடன் நடந்த நிகழ்வுகளின் காட்சிகளைக் கொண்டு எந்தவித சட்டச் சிக்கல்களிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
சாலைகளில் பயணிக்கும்போது உங்கள் மீது எதிர்பாராமல் தொடுக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடவும் இப்பதிவுகள் உதவும்.

இதையும் படியுங்கள்:
ருசிக்க ரசிக்க சூப்பர் சென்னா மசாலா கிரேவி!
டேஷ் கேமரா...

நீங்கள் வாடகைக்கு விட்டிருக்கும் வாகனத்தை ஓட்டுநர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கேமராக்கள் உதவுகின்றன.
அதேபோல முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்லும்போது, பிற வாகனங்களின் மீது மோதும் சூழல் ஏற்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை வழங்குவது போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கேமராக்கள் வழங்குகின்றன.

இன்று சந்தையிலிருக்கும் முன்னணி வாகன பிராண்டுகள் 360 டிகிரி டேஷ்கேமராக்களுடனும் வாகனங்களை வெளியிடுகின்றன. அவை கேபினையும் படம்பிடித்து வைத்துக் கொள்கிறது.
டேஷ் கேமராக்கள் வாகனங்களுடன் மட்டுமல்லாது தனியாகவும் நாமே  வாங்கி பொருத்தி கொள்ளும் வகையிலும் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றின் சேமிப்புத் திறனைப் பொறுத்து காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு, வாகனங்களில் பொருத்தப்படும் டேஷ்கேம்கள் சாலை பாதுகாப்பு விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com