இந்தியாவின் ஆழ்கடல் பகுதிகளை பற்றி தெரியுமா? நம்மால் அங்கு போக முடியுமா?

Deep sea of ​​India
Deep sea of ​​India
Published on

நீர் என்றாலே நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு வித பதற்றம் ஏற்படும். அதுவும் சற்று ஆழமான நீர் நிலை என்று கேள்விப்பட்டால் சொல்லவே வேண்டாம், அந்த பக்கமே வரமாட்டார்கள். இப்படி பட்டவர்கள், வருவதற்கே அஞ்சும், இந்தியாவில் உள்ள சில ஆழமான கடல் பகுதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் உள்ள ஆழ்கடல் பகுதிகள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளங்களை (resource) பிரித்தெடுப்பதற்கான பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகின்றன. நாட்டின் மிக ஆழமான கடல் பகுதிகளில் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடல் படுகை (Central Indian Ocean Basin) (CIOB) மற்றும் அந்தமான் கடல் ஆகியவையாகும். இதில் CIOB சுமார் 6,000 மீட்டர் ஆழம் கொண்டது. இது, மாங்கனீசு (manganese), நிக்கல் (nickel), கோபால்ட்(cobalt) மற்றும் காப்பர் (copper) போன்ற மதிப்புமிக்க கனிமங்களைக் கொண்ட பாலிமெட்டாலிக் (polymetallic) வளங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க ஆழ்கடல் பகுதியான அந்தமான் ட்ரென்ச் (Andaman Trench) 4,500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தை கொண்டது.

இந்த இடங்களில் மனித நடமாட்டம் எந்த வகையில் இருக்கும்?

இந்த பகுதிகளில் மனித நடமாட்டம் என்று பார்த்தால், அறிவியல் ஆய்வு மற்றும் வளங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகளே அதிகம் நடைபெறும். இந்தியாவின் டீப் ஓஷன் மிஷன் (DOM) (Deep Ocean Mission) என்ற திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக Matsya6000 நீர்மூழ்கிக் கப்பல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ள கப்பல்களை பயன்படுத்தி 6,000 மீட்டர் ஆழத்தை அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, இந்த ஆழ்கடலில் உள்ள பகுதிகளின் மர்மங்களை அவிழ்த்து புவியியல் (geology), கடல் உயிரியல் (marine biology) மற்றும் சாத்தியமான வளங்களை பற்றிய நுண்ணறிவுகளை பெறுவதற்காகவே.

கப்பல் இன்றி நீந்தி போக முடியுமா?

இந்த ஆழங்களுக்குள் நுழையும் மனிதர்கள் கடுமையான சுற்றுசூழல் நிலைமைகளின் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

நீங்கள் இந்த ஆழத்தில் மூழ்கினால், உங்கள் உடலின் ஒரு சதுர அங்குலத்தில் (per square inch) ஒரு கார் ஏறி நின்றால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட அபரிமிதமான அழுத்தத்தை நீங்கள் உணர்வீர்கள். நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் சில நிலையான உபகரணங்களே இந்த அழுத்தத்தால் பல நேரங்களில் எளிதில் நசுங்கி விடும்! இதில் போகும் நீர்மூழ்கிக் கப்பல் சிக்கிக் கொண்டாலோ அல்லது செயலிழந்தாலோ, ஆக்சிஜன் குறைபாடு, கடும் குளிர் மற்றும் தகவல் தொடர்பு செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு போராட வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே தான் இந்த வகையான அபாயங்களை சமாளிப்பதற்கான சிறப்பு பயிற்சி மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகின்றன. ஆகவே இந்த சூழ்நிலைகளில் திறமையான பணியாளர்கள் மட்டுமே இத்தகைய பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மின்னல் வேகத்தில் விண்வெளி பயணம்... அசத்தும் SpaceXன் Starship விண்கலம்!
Deep sea of ​​India

இந்த கடுமையான பணி தேவைதானா?

இந்த ஆழ்கடல் பகுதிகளின் முக்கியத்துவம் அறிவியல் மற்றும் பொருளாதார ஆற்றலுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நமது கிரகத்தின் இதுவரை ஆராயப்படாத எல்லைகளை அவை நமக்கு ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகின்றன. அதற்கு தேவையான கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமும், மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பகுதிகளை பாதுகாப்புடன் ஆராய்ந்து, அனைவருக்கும் தேவையான மதிப்புமிக்க அறிவை பெற்று இந்த மனித சமுதாயத்திற்கு கொடுக்க முடியும்.

ஆக, இந்தியாவின் இந்த ஆழ்கடல் பகுதிகள் அவற்றின் அறிவியல் மற்றும் வளங்கள் சார்ந்த ஆற்றலுக்காக மிகவும் மதிப்பு மிக்கவையாக திகழ்கின்றன. இந்த பகுதிகளை ஆராய்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தீவிர சுற்றுச்சூழல் நிலைமைகள் தேவை என்பதன் காரணமாக, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் சாதாரண மனிதர்களால் இப்போதைக்கு செல்ல இயலாது. அதை தகர்க்கவே இந்த விஷயத்தில் இந்தியாவின் டீப் ஓஷன் மிஷன்(DOM) ஒரு முன்னோடியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com