உங்க ஸ்மார்ட்போனில் இருக்கும் PDF File-களை உடனே டெலிட் பண்ணுங்க! 

Delete PDF Files
Delete PDF Files
Published on

நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து அவற்றை நம் ஸ்மார்ட்போனில் சேமித்து வைப்போம். இந்த கோப்புகளில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒன்றுதான் PDF Files. ஆதார் கார்டு, பான் கார்டு, டிஜிட்டல் ரசீதுகள் என பல முக்கியமான ஆவணங்கள் PDF வடிவில்தான் பகிரப்படுகின்றன. ஆனால், இந்த கோப்புகள் நமக்கு மட்டுமல்லாமல் நம் ஸ்மார்ட்போனுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 

PDF கோப்புகளினால் ஏற்படும் ஆபத்துக்கள்: 

இணையத்தில் டவுன்லோட் செய்யும் PDF கோப்புகளில் வைரஸ் மற்றும் மால்வேர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற கோப்புகளைத் திறப்பும்போது நம் ஸ்மார்ட்போனில் வைரஸ் பரவி அனைத்து தகவல்களும் திருடப்பட வாய்ப்புள்ளது. 

சில PDF கோப்புகள் நம்மிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்கும். இந்தத் தகவல்களை ஹேக்கர்கள் சேகரித்து நம்மை ஏமாற்றி பணம் பறிக்கவோ அல்லது நம் பெயரில் மோசடிகள் செய்யவோ பயன்படுத்தலாம். அல்லது இந்த கோப்புகள் வாயிலாக நம்மை வெளிப்புற இணையதளங்களுக்கு இணைத்து, நம்முடைய பாஸ்வேர்டு மற்றும் தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது. 

எப்படி தடுப்பது? 

இணையத்தில் எந்த ஒரு PDF கோப்பையும் பதிவிறக்கம் செய்வதற்கு முன், அது நம்பகமான இணையதளத்திலிருந்து வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனில் நல்ல ஆன்டிவைரஸ் மென்பொருளை நிறுவி, அடிக்கடி ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். இது வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட்ஃபோனை பாதுகாக்கும். 

இதையும் படியுங்கள்:
நோயாளியிடம் நலம் விசாரிக்கப் போகையில் செய்யக் கூடாததும் செய்ய வேண்டியதும்!
Delete PDF Files

PDF கோப்பில் உள்ள இணைப்புகள் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தாமல் கிளிக் செய்ய வேண்டாம். அதேபோல ஏதேனும் PDF ஃபைலைத் திறப்பதற்கு உங்களது தனிப்பட்ட தகவல்கள் கேட்டால் அதைப் பகிர வேண்டாம்.  அவ்வப்போது உங்கள் ஸ்மார்ட்போனை புதுப்பித்து, புதிய அப்டேட் வந்தவுடன் உடனடியாக இன்ஸ்டால் செய்யுங்கள். 

PDF கோப்புகள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதைக் கையாளும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலே, குறிப்பிட்டுள்ள எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் PDF கோப்புகளால் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com