பின்கோடு, இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் உள்ள அஞ்சல் சேவைகளுக்கான ஒரு அடையாள எண்ணாக கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணம், இதுபோல மற்றொரு தனித்துவமான "டிஜி பின்" எனப்படும் அடையாள எண் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட இருக்கிறது. இனிமேல் யாராவது முகவரி என்ன என்று கேட்டால், இந்த "டிஜி பின்" எனும் தனித்துவ அடையாள எண்ணை வழங்கினால் போதுமானதெனக் கூறப்படுகிறது. இதன் விபரங்கள்தான் என்ன??
பின்கோடு :- (PIN CODE)
அஞ்சல் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் பின்கோடு ஆறு இலக்க எண்களைக் கொண்டது. முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது உள் மண்டலத்தையும், மூன்றாவது மண்டலத்திற்குள் வரிசைப்படுத்தும் மாவட்டத்தையும், நான்காவது வரிசைப்படுத்தும் மாவட்டத்திலுள்ள அலுவலகம் அமைந்துள்ள வழியையும் குறிக்கின்றன. கடைசி இரண்டு இலக்கங்கள் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தை அடையாளம் காட்டுகின்றன.
டிஜி பின் (DG PIN - Digital Postal Index Number)
டிஜி பின், எழுத்துக்களையும் எண்களையும் கொண்ட பத்து இலக்க குறியீடாகும்.
டிஜி பின், குறிப்பிட்ட முகவரிக்கு தனித்துவ அடையாளமாக விளங்கும்.
ஜியோ லொகேஷன் முறையில் செயல்படவிருக்கும் டிஜி பின் அஞ்சல் சேவைகளுக்கும் பயன்படலாம்.
பின் கோடு மற்றும் டிஜி பின் இரண்டின் வேறுபாடுகள்:-
பின்கோடு ஆறு இலக்கமும், டி ஜி பின் பத்து இலக்கமும் கொண்டது.
பின்கோடு, தபால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். டி ஜி பின், முகவரிக்கு தனித்துவ அடையாளத்தைக் கொடுக்கும்.
டி ஜி பின் தொழில்நுட்ப உருவாக்கம் :-
I I T ஹைதராபாத் மற்றும் இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் ஆகிய இரண்டும் இணைந்து டிஜிபின் (DIGIPIN) என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு பத்து இலக்க குறியீடு அதன் தனித்துவ அடையாள எண்ணாக வழங்கப்பட இருக்கிறது.
முகவரிக்கான டிஜிபின்னை தெரிந்து கொள்ள, https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற இணையதளத்துக்கு சென்று நம் location ஐ enable செய்கையில், அந்த லொகேஷனுக்கான டிஜி பின் உருவாகி திரையில் காட்டும் சொல்லப்படுகிறது. குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் வசதி கொண்ட போன் அல்லது ஸ்மார்ட் கருவியை வைத்து தான் நம்முடைய முகவரிக்கான டிஜி பின்னை தெரிந்து கொள்ள முடியும். இதற்காகவே தபால் துறை தனி செயலியை உருவாக்கி வருகிறது.
பாராட்டப்பட வேண்டிய அருமையான தொழில் நுட்பம் DG PIN. சரிதானே!